25 பவுண்டரி 13 சிக்ஸர்.. முச்சதம் அடித்த ஆர்சிபி வீரர்.. தக்க வைக்காமல் விட்ட சோகம்.. ரஞ்சி டிராபி 2024

0
1613
Lomrar

நடப்பு ரஞ்சி டிராபி தொடரில் உத்தரகாண்ட் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணிக்காகவும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காகவும் விளையாடும் அன் கேப்டு பிளேயர் ஒருவர் அதிரடியாக முச்சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் ரஞ்சி டிராபி போட்டி டேராடூன் மைதானத்தில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற உத்தரகாண்ட அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

முச்சதம் அடித்த ஆர்சிபி வீரர்

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய வந்த ராஜஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் அப்ஜித் தோமர் 20, ராம் சவுகான் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணிக்கு மூன்றாவது இடத்தில் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடும் மகிபால் லோம்ரர் விளையாட வந்தார்.

சிறப்பாக விளையாடிய மகிபால் லோம்ரர் சதம் மற்றும் இரட்டை சதத்தை கடந்து தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். இறுதியில் அவர் ஆட்டம் இழக்காமல் 360 பந்துகளில் 25 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்கள் உடன் முச்சதம் அடித்து அசத்தினார். மேற்கொண்டு ராஜஸ்தான் அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 660 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடுகிறது.

- Advertisement -

தக்க வைக்காமல் விட்ட ஆர்சிபி

மகிபால் நோம்புரர் ஐபிஎல் தொடரில் 2018 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் இருந்து 2021 ஆம் ஆண்டு வரையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாயில் விளையாடி வந்தார். இதைத்தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணி அவரை 95 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

இதையும் படிங்க : 19 ஓவர் தெறிக்கவிட்ட முகமது ஷமி.. 3 விஷயங்கள் டாப் கிளாஸ்.. ஆஸி தொடருக்கு ரெடி.. இந்திய முகாம் மகிழ்ச்சி

இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் மெகா ஏலத்திற்கு அன்கேப்டு பிளேயராக மகிபால் லோம்ரரை ஆர்சிபி அணி நான்கு கோடி ரூபாய்க்கு தக்க வைக்காமல் வெளியில் விட்டிருக்கிறது. அவரை நான்கு கோடிக்கும் குறைவான தொகையில் மேற்கொண்டு ஏலத்தில் ஆர்டிஎம் மூலம் வாங்க முடியும் என்று ஆர்சிபி நம்பியது. இப்படியான நிலையில் ரஞ்சி டிராபியில் அவர் முச்சதம் அடித்து, ஐபிஎல் சந்தையில் தன்னுடைய விலையை கணிசமாக உயர்த்தி விட்டு இருக்கிறார். தற்பொழுது தக்க வைக்காமல் விட்டதற்கு ஆர்சிபி வருத்தப்படும் சூழல் உருவாகி இருக்கிறது!

- Advertisement -