ஹைதராபாத் பணத்தை கரைத்த ராஜஸ்தான் ; ஆனாலும் அசராத ஹைதராபாத்!

0
722
SRH

தற்பொழுது கேரள மாநிலம் கொச்சின் நகரில் ஐபிஎல் மினி ஏலம் நடந்து வருகிறது. ஐபிஎல் மினி ஏலம் என்பது மெகா ஏலத்திற்கு சமமான ஒன்றுதான்!

ஏலம் துவங்கியதும் முதலில் வந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கேன் வில்லியம்சனை எந்த அணிகளும் வாங்குவதற்கு விருப்பம் காட்ட வில்லை!

- Advertisement -

இதை அடுத்து இரண்டாவது வீரராக இங்கிலாந்து அணியின் இளம் நட்சத்திர வீரர் ஹாரி புரூக் அவரது அடிப்படை விலையான 1.50 கோடிக்கு வந்தார்.

இவரை வாங்க ஆரம்பத்தில் பெங்களூர் அணியும் ராஜஸ்தான் அணியும் போட்டியிட்டன. ஆனால் ஏலத்தின் நடுவில் பெங்களூரு அணி பின் வாங்கிக் கொண்டது.

பெங்களூர் அணி நகர்ந்ததும் ஏலத்தில் குறுக்கே புகுந்த ஐதராபாத் அணி ராஜஸ்தான் அணியுடன் போட்டியிட்டது. ராஜஸ்தான் அணி 13 கோடி வரை விடாமல் ஏலத்தில் தொடர்ந்தது.

- Advertisement -

இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ராஜஸ்தான் கையில் இருந்த பணமே 13 கோடி தான். இதை வைத்து ஹைதராபாத் அணிக்கு செலவை ஏற்றி விட்டது. கடைசியாக ஹைதராபாத் அணி 13.25 கோடிக்கு ஹாரி புரூக்கை வாங்கியது!

இதற்கடுத்து இந்திய வீரர் மயங்க் அகர்வால் ஏலத்திற்கு வந்தார். இவரது அடிப்படை விலை இரண்டு கோடி. இவரது சொந்த அணியான பஞ்சாபி மீண்டும் இவரை வாங்க விருப்பம் காட்டியது. பஞ்சாப் அணியோடு ஏலத்தில் பெங்களூர் அணி மோதியது.

பஞ்சாப் அணி விலகிக் கொள்ள திடீரென்று குதித்தது சென்னை அணி. நடுவில் பெங்களூர் அணியும் விலகிக் கொள்ள ஹைதராபாத் அணி வந்து சேர்ந்தது. சென்னை ஹைதராபாத் அணிகளுக்கு இடையே மயங்க் அகர்வாலை வாங்க போட்டி ஏற்பட்டது.

இறுதியில் ஹைதராபாத் அணி மயங்க் அதர்வாலை 8.25 கோடிக்கு வாங்கியது. ஏலத்தின் முதல் சுற்றில் இரண்டு வீரர்களை 21.50 கோடிக்கு ஹைதராபாத் அணி வாங்கி இருக்கிறது!

இதற்கு அடுத்து இங்கிலாந்து அணி நட்சத்திர வீரர் ஜோ ரூட், மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் ரூசோவ் ஆகியோர் விலை போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!