பவர் பிளே சாதனையுடன் தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் – இந்த வருட ஐபிஎல் தொடரில் முதலில் 200 ரண்களை எட்டுமா?

0
58

இந்தியன் பிரிமியர் லீக் 16வது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் தொடரை நான்காவது போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் மூன்று முப்பது மணி அளவில் துவங்கியது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் ராஜஸ்தான் ராயல் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணிந்தார்.

ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களான ஜாஸ் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் அதிரடியான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இவர்கள் இருவரும் ஆரம்பம் முதலே பௌண்டரிகளும் சிக்ஸர்களும் ஆக விலாச அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அதிலும் குறிப்பாக ஜாஸ் பட்லர் மிகவும் அதிரடியாக ஆடினார்.

- Advertisement -

முதல் ஐந்து ஓவர்களுக்கு முன்பாகவே 20 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார் பட்லர். சிறப்பாக ஆடி அவர் 22 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்களுடன் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவர் பிளேயரில் மட்டும் ஆறு ஓவர்களில் 86 ரன்கள் குவித்தது . இது ஐபிஎல் வரலாற்றில் ஐந்தாவது அதிகபட்ச பவர் பிளே ஸ்கோர் ஆகும்.

இதனைத் தொடர்ந்து கேப்டன் சஞ்சு சாம்சன் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்தார் இவர்கள் இருவரும் ஆரம்பத்திலிருந்த ரன் ரேட் குறையாமல் அதே அதிரடியோடு அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் தனது அரை சதத்தை பதிவு செய்தார். 37 பந்துகளில் 54 ரன்களை எடுத்து இருந்த ஜெய்ஸ்வால் பாரூக்கீ பந்துவீச்சில் அவுட் ஆனார் .

ஒரு முனையில் கேப்டன் சஞ்சீவ் சாம்சன் அதிரடியாக ஆட மறுமுனையில் இளம் வீரர் பராக் கேப்டனுக்கு உறுதுணையாக ஆடிக் கொண்டிருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகப் பெரிய இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஐந்து ஓவர்கள் மீதமுள்ள நிலையில் 7 விக்கெட் கைவசம் இருக்கின்றன. அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 25 பந்துகளில் 48 ரன்களுடனும் ரியான் பராக் ஆறு கண்களுடனும் களத்தில் உள்ளனர்.

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.3 ஓவர்களில் 168 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது. இன்னும் ஐந்து ஓவர்கள் மீதம் இருக்கும் நிலையில் 200-220 ரன்கள் வரை பெறுவதற்கு அந்த அணிக்கு வாய்ப்பு இருக்கிறது. ஹெட்மயர் போன்ற வீரர்கள் பின் வரிசையில் இருப்பதால் நிச்சயமாக ராஜஸ்தான் அணி 200 ரண்களைக் கடந்து செல்லும்.