ராஜஸ்தான் அணியில் வெடித்த சர்ச்சை.. பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து டிராவிட் விலகல்.. பின்னணியில் இவரா?

0
111

2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகியுள்ளார். அவர் இனி இந்த அணியில் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை. இந்த அணியை அவர் வீரராகவும், பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார்.

.“ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ஐபிஎல் 2026-க்கு முன்னதாக தனது பதவிக்காலத்தை முடித்துக்கொள்கிறார்,” என அந்த அணி தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டது. ஆகஸ்ட் 30, சனிக்கிழமையன்று.ராகுல் பல ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயணத்தில் முக்கியப் பங்காற்றியவர்.

- Advertisement -

ராஜஸ்தான் அணி நன்றி:

அவரது தலைமை, ஒரு தலைமுறை வீரர்களை உருவாக்கி, அணியில் தனக்கு என ஒரு முத்திரையைப் பதித்துள்ளது. ராகுலுக்கு அணியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ், அதன் வீரர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ளரசிகர்கள், ராகுலின் அற்புதமான சேவைக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றனர்,” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2024 டி20 உலகக் கோப்பை முடிவடைந்த பிறகு இந்திய ஆடவர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2008 சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைந்தார். இதற்கு முன்பு, 2014 மற்றும் 2015 ஐபிஎல் தொடர்களில் அணியின் ஆலோசகராகப் பணியாற்றியிருந்தார்.

- Advertisement -

பின்னணியில் யார்?

மேலும் 2025 தொடருக்கு தலைமைப் பயிற்சியாளராகத் திரும்பினார்.கர்நாடகாவைச் சேர்ந்த இந்த டிராவிட் 2011 முதல் 2013 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வீரராகவும், கேப்டனாகவும் பங்காற்றியுள்ளார். அவர் அணிக்காக ஐபிஎல்லில் மொத்தம் 46 போட்டிகளில் விளையாடி, 29.00 சராசரியுடன் 1276 ரன்கள் குவித்துள்ளார், இதில் ஏழு அரைசதங்கள் அடங்கும். அவரது கேப்டன்ஷிப்பின் கீழ், ஜெய்ப்பூர் அணி 2013 சாம்பியன்ஸ் லீக் டி20 இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

இதையும் படிங்க:ஐபிஎல் இல்லனா என்ன.. வீரர்கள் எதிர்காலத்திற்கு இவ்வளவு வாய்ப்புகள் இருக்கு – யோசனை கூறும் அஸ்வின்

அவர் இப்போது விலகியுள்ள நிலையில், அடுத்த சீசனுக்கான மினி ஏலம் இன்னும் 3 மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த சூழலில் அடுத்த அணியின் தலைமை பயிற்சியாளராக சங்கக்காரா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சஞ்சு சாம்சனுக்கும், ராஜஸ்தான் அணிக்கும் இடையே விரிசல் ஏற்பட்ட நிலையில், டிராவிட் தற்போது விலகியுள்ளார். ராஜஸ்தான் அணியில் 23 வயது வீரரான ரியான் பராக் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இது தான் பிரச்சினைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -