துருவ் ஜூரலை நான் நம்பறேன்.. அவர் யார் என்னனு அங்க பார்த்திருக்கேன் – சஞ்சு சாம்சன் பேட்டி

0
658
Sanju

நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களின் ஒன்பதாவது போட்டியில் இன்று லக்னோ மணிக்கு எதிராக அவர்களது சொந்த மைதானத்தில் விளையாடிய ராஜஸ்தான் அணி எட்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற சஞ்சு சாம்சன் பேசும்பொழுது நிறைய விஷயங்கள் குறித்து தெரிவித்திருக்கிறார்.

இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் முதலில் டாஸ் வென்று லக்னோ அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல்.ராகுல் 48 பந்துகளில் 76 ரன்கள், தீபக் ஹூடா 31பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் லக்னோ அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு பட்லர், ஜெய்ஷ்வால் மற்றும் ரியான் பராக் என மிக முக்கிய மூன்று விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது. லக்னோ அணி உடனடியாக போட்டிக்குள் வந்தது.

இப்படியான நிலையில் கேப்டன் சஞ்சு சாம்சன் துருவ் ஜுரல் உடன் இணைய, சிறப்பான ஆட்டத்தை இருவருமே வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி 62 பந்துகளில் அதிரடியாக 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஜூரல் 34 பந்தில் 52 ரன்கள், சஞ்சு சாம்சன் 33 பந்தில் 71 ரன்கள் எடுத்து, 19 ஓவர்களில் லக்னோ அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணியை வெற்றி பெற வைத்தார்கள்.

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற சஞ்சு சாம்சன் பேசும் பொழுது “விக்கெட் கீப்பராக இருப்பது மிகவும் அதிர்ஷ்டமான ஒன்று. புதிய பந்தில் எங்களுக்கு நல்ல பர்ச்சேஸ் இருந்தது. பின்பு நாங்கள் பேட்டிங் செய்யும்பொழுது விக்கெட் பேட்டிங் செய்ய நன்றாக இருந்தது. பவர் ப்ளே பந்துவீச்சில் வந்து ஒரு ஓவர் வீசக்கூடியவர்களும் முக்கியமான வேலையைச் செய்தார்கள். திரைக்குப் பின்னால் நிறைய திட்டமிடல்கள் நடக்கிறது. நாங்கள் வந்து வீச்சில் தொடக்கத்தையும் இறுதியையும் சிறப்பாக செய்தோம். ஆனால் மிடில் ஓவர்களில் எங்களிடமிருந்து ரன்கள் எடுக்கப்பட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : 10 பந்துக்கு 15 ரன்.. வாய்ப்பை தவறவிட்ட நியூசிலாந்து.. தப்பிய பாகிஸ்தான் அணி.. பாபரின் 8 பவுலர்கள் கான்செப்ட்

டி20 கிரிக்கெட்டில் பார்ம் என்பது தற்காலிகமானது. நாங்கள் ஜூரலை நம்புகிறோம். அவரை நாங்கள் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் சமீபத்தில் பார்த்திருக்கிறோம். அவர் வலைகளில் நிறைய நேரம் பேட்டிங்கில் செலவிடுகிறார். நாங்கள் உண்மையாகவே எல்லாவற்றையும் நன்றாக செய்கிறோம். அதே சமயத்தில் நாங்களும் அதிர்ஷ்டசாலிதான். நாங்கள் எங்களுடைய செயல்முறைகளை சரியாக வைத்திருக்க வேண்டும். அவற்றை செயல்படுத்துவது தொடர்பாக டீம் மீட்டிங்கில் எப்பொழுதும் பேசுகிறோம். மேலும் நாங்கள் எப்பொழுதும் ஒவ்வொரு போட்டியாக மட்டுமே எடுத்துக் கொள்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.