துருவ் ஜுரல் எதிர்காலத்திற்காக.. ஐபிஎல் தொடரில் இந்த தியாகத்தை செய்ய போறேன் – சஞ்சு சாம்சன் தகவல்

0
952
Sanju

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் துருவ் ஜுரல் கிரிக்கெட் எதிர்காலத்திற்காக முக்கியமான ஒரு விஷயத்தை செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

நடப்பு மெகா ஏலத்திற்கு முன்பாக சஞ்சு சாம்சன், துருவ் ஜுரல் இருவருடன் சேர்ந்து ஜோஸ் பட்லர் என மொத்தம் மூன்று விக்கெட் கீப்பிங் பேஸ்மேன்கள் அணியில் இருந்தார்கள். தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜோஸ் பட்லரை கழட்டி விட்டு இருக்கிறது.

- Advertisement -

இரண்டு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறுவது என்பது இனி நடக்காத காரியம் இன்றி கூறலாம். ஆனால் இந்திய டெஸ்ட் அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான இடத்தை ஏறக்குறைய துருவ் ஜுரல் உறுதி செய்து விட்டார்.

மேலும் எதிர்காலத்தில் அவர் இந்திய வெள்ளைப்பந்து அணிகளிலும் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. எனவே அவர் தொடர்ந்து விக்கெட் கீப்பராக எல்லா வகையிலும் பணியாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. இதை முன்வைத்து கேப்டன் சஞ்சு சாம்சன் தாமாக முன்வந்து, வருகின்ற ஐபிஎல் தொடரில் ஒரு மாற்றத்தை செய்ய இருப்பதாக கூறி இருக்கிறார்.

- Advertisement -

துருவ் ஜுரல் எதிர்காலத்திற்காக செய்கிறேன்

இதுகுறித்து சஞ்சு சாம்சன் கூறும் பொழுது “இந்த விஷயத்தை நான் நேரில் சொல்லவில்லை. ஆனால் தனிப்பட்ட வீரர்களின் நலன்களுக்காக நாங்கள் இப்படி உணர்கிறோம். ஜுரல் தற்போது இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக இருக்கிறார். எனவே ஐபிஎல் தொடரிலும் அவர் விக்கெட் கீப்பராக பணியாற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன். இதை அவருடைய கிரிக்கெட் எதிர்காலத்திற்காக செய்ய வேண்டியது இருக்கிறது”

இதையும் படிங்க : இந்திய டி20 ODI தொடர்.. 2 இங்கிலாந்து அணிகள் அறிவிப்பு.. 4 ஸ்டார் வீரர்கள் நீக்கம்.. சாம்பியன்ஸ் டிராபிக்கும் தொடரும்

“இது குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் இருவரும் விக்கெட் கீப்பர் வேலையை பிரித்துக் கொள்ள இருக்கிறோம். நான் ஒரு ஃபீல்டராக அதிகம் கேப்டனாக இருந்ததில்லை. இதை நான் ஜூரளிடம் நேர்மையாக சொன்னேன். ” ஜூரல் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்பது குறித்து உங்களுக்கு என்ன தேவை என ஒரு கேப்டனாக எனக்கு நன்றாக புரிகிறது. நீங்கள் சில போட்டிகளில் விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும். அது எப்படி செல்கிறது என்று பார்க்கலாம். இறுதியில் எதுவும் அணியை பாதிக்கக் கூடாது. அணியே முதன்மையானதாக இருக்க வேண்டும் என்று பேசினேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -