ஐபிஎல் 2025

எங்க டீம்ல யாருக்குமே இல்லாத உரிமை.. 14 வயசு வைபவுக்கு இருக்கு.. பயத்தை கொடுக்காம பாதுகாத்து வரோம் – ராஜஸ்தான் கோச்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வயது தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்சி அதிரடியான முறையில் விளையாடிய ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேர் பாண்ட் சூரியவன்சி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

14 வயது அபார திறமை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொருத்தவரை இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தவில்லை என்றாலும் 14 வயது வீரரை அறிமுகப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 14 வயது வீரரான வைபவ் சூரியவன்சியை அறிமுகப்படுத்தி பெரிய கவனத்தை ஈர்த்தது. அதில் சிறப்பாக விளையாடிய 14 வயது சிறுவன் தன்னுடைய திறமையை நிலைநாட்டினார்.

அதற்குப் பிறகு பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தாலும், குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி சதம் அடித்து அதிவேக சதம் அடித்த இரண்டாவது வீரர் என்கிற சாதனையை படைத்தார். இந்த சூழ்நிலையில் இது குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளரான ஷேன் பாண்ட் வைபவுக்கு எந்த விதமான நெருக்கடியும் கொடுக்கவில்லை எனவும் கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வந்து அதிரடியாக விளையாடும் உரிமத்தை அவருக்கு வழங்கி இருக்கிறோம் எனவும் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

மிகவும் கவனமாக இருக்கிறோம்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “வைபவ் எந்தவித கட்டுப்பாடுமின்றி வெளியே சென்று அதிரடியாக விளையாடும் உரிமை அவருக்கு கிடைத்துள்ளது. உண்மையில் 14 வயது சிறுவன் தனது வேலையை அற்புதமாக செய்திருக்கிறார். வைபவ் விஷயத்தில் பயிற்சியாளர்கள் அதிகம் சிக்கலாக்க விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன். கடந்த ஆட்டத்தில் அவர் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் உண்மையாக இவ்வளவு இளம் வயதில் அவர் பீதி அடைவதை நாங்கள் விரும்பவில்லை.

இதையும் படிங்க:வன்ஸ் பேடி ஆடாமல் ஹூடா ஆடுவது ஏன்.. கடைசி நேரத்தில் என்ன நடந்தது?.. சிஎஸ்கே வெளியிட்ட தகவல்

அவர் ஒரு திறமையான வீரர் என்பது தெளிவாகிறது. இருப்பினும் அவர் இன்னும் ஒரு சிறு குழந்தை. இந்த ஐபிஎல் சீசனின் போது அவர் நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்கிறார். எனவே நாங்கள் அவரது விஷயத்தில் மிகவும் பொறுமையாக இருப்போம். பொறுமையாக இருப்பது மிகவும் முக்கியம். எனக்கு ஒரு 16 வயது மகன் இருக்கிறான். அதனால் வைபவை சுற்றி உள்ள விஷயங்களை கற்றுக் கொடுத்து அவரை கவனித்துக் கொள்ள முயற்சிக்கிறோம். குறிப்பாக சமூக ஊடக விஷயங்களில் இருந்து அவரை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்கிறோம்” ஷேன் பாண்ட் போன்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts