டி20 WC ஸ்டைலில்.. ஐபிஎல் கோப்பைய வெல்ல டிராவிட் மாஸ் பிளான்.. கோச்சானதும் முதல் முடிவு

0
47
Sanju samson and Rahul dravid

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக ஐபிஎல் அணிகள் தங்களுக்குத் தேவையான வலுவான பயிற்சியாளர் குழுவை நியமித்து வருகிறது. வீரர்களை எடுப்பதில் காட்டும் அதே அளவு முக்கியத்துவம் தற்போது பயிற்சியாளர் விஷயத்திலும் உன்னிப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் ஐபிஎல்லின் முன்னணி அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சமீபத்தில் தலைமை பயிற்ச்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இந்திய அணி டி20 உலக கோப்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய பயிற்சியாளர் ஒருவர் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

- Advertisement -

ஐபிஎல்லின் தொடக்க ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. அதற்குப் பிறகு திறமையான வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைத்தும் நன்றாக அமைந்தாலும் அந்த அணியால் இன்று வரை இன்னொரு ஐபிஎல் பட்டத்தை வெல்ல முடியவில்லை.

இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வலு சேர்க்கும் விதமாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளராக திகழ்ந்த ராகுல் டிராவிட் தற்போது ராஜஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்ச்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து தற்போது ராஜஸ்தான் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணிக்கு பயிற்சியாளராகத் திகழ்ந்த விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

ராகுல் டிராவிட் மற்றும் விக்ரமரத்தோர் கூட்டணி ஏற்கனவே இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றி இருப்பதால் அடுத்த ஆண்டு களம் இறங்க உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீது தற்போது அதிக அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ராஜஸ்தான் அணியில் இணைந்தது குறித்து டிராவிட் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இது குறித்து டிராவிட் விரிவாக கூறும்போது “பல ஆண்டுகளாக விக்ரம் உடன் நெருக்கமாக பணியாற்றியதில் அவரது தொழில் நுட்ப அனுபவம், அமைதியான நடத்தை மற்றும் இந்திய சூழ்நிலைகள் குறித்து ஆழமான புரிதல் ஆகியவை இராஜஸ்தான் அணிக்கு பொருத்தமாக மாற்றும் என்பதில் நான் உறுதியாக நம்புகிறேன். நாங்கள் ஒரு வலுவான பிணைப்பை உருவாக்கி முக்கிய வெற்றிகளுக்கு இந்தியாவை வழிநடத்தி இருக்கிறோம்.

இதையும் படிங்க: பும்ரா 400வது விக்கெட்.. சென்னையில் ரசிகர்களுக்கு பவுலிங் மேஜிக்.. சுருண்ட பங்களாதேஷ் அணி.. டிரைவர் சீட்டில் இந்தியா

அவருடன் இணைவதில் நான் மீண்டும் மகிழ்ச்சி அடைகிறேன். இளம் திறமைகளை வளர்ப்பதற்கும், அவர்களின் திறனை உயர்த்துவதற்கும் அவரது திறன் விலைமதிப்பற்றதாக இருக்கும். நாங்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஒரு வலுவான இந்த உலகத்தரம் வாய்ந்த அணியாக மாற்றுவதில் உறுதியாக இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -