இந்தியாவுல சச்சினுக்கு அடுத்து.. இவருக்குத்தான் பெரிய வரவேற்பு இருக்கு – ஜஸ்டின் லாங்கர் கருத்து

0
164
Dhoni

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பொறுப்பேற்று இருந்தால். ஆனால் இந்த முறை அந்த அணியால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் நடைபெற்ற சில முக்கிய சம்பவங்கள் குறித்து அவர் பேசியிருக்கிறார்.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு புதிதாக வந்த லக்னோ அணி முதல் இரண்டு ஆண்டும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. அந்த இரண்டு ஆண்டுகளிலும் அந்த அணிக்கு மென்டராக இருந்தவர் கவுதம் கம்பீர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் ஜஸ்டின் லாங்கரை புதிய தலைமைப் பயிற்சியாளராக அந்த அணி நிர்வாகம் கொண்டு வந்தது. கவுதம் கம்பீர் அங்கிருந்து விலகி நேராக தன்னுடைய பழைய அணியான கொல்கத்தாவுக்கு சென்று விட்டா. தற்பொழுது கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாததை அடுத்து, நடப்பு ஐபிஎல் தொடரில் தான் பார்த்த முக்கிய நிகழ்வுகள் குறித்து, அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மனம் திறந்து நிறைய பேசி வருகிறார். இதில் லக்னோ மைதானத்தில் தோனிக்கு கிடைத்த வரவேற்பு குறித்து அவர் மிகவும் ஆச்சரியமடைந்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறும்பொழுது “தோனிக்கு கிடைத்த வரவேற்பு என்பது அசாதாரணமானது. இதைப் பற்றி நான் ஏற்கனவே கேள்விப்பட்டு இருக்கிறேன். நாங்கள் இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிராக இரண்டு முறை விளையாடினோம். எங்கள் மைதானத்தில் 50 ஆயிரம் ரசிகர்கள் வரலாம். அன்றைய குறிப்பிட்ட சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 48 ஆயிரம் பேர் தோனியின் ஏழாம் நம்பர் ஜெர்சி அணிந்த பனியன் உடன் வந்திருந்தார்கள். என்னால்அதை நம்பவே முடியவில்லை. மேலும் நாங்கள் சென்னை மைதானத்திற்கு சென்ற பொழுது 98 சதவீதம் அவர்கள் தான் இருந்தார்கள்.

இதையும் படிங்க : எங்க டீம் மீட்டிங் வெறும் 35 செகண்ட்ஸ் தான் நடந்தது.. காரணம் எங்க கேப்டன் கம்மின்ஸ் – ஹைதராபாத் கோச் பேட்டி

நான் இந்தியா வந்து விளையாடிய பொழுது சச்சினுக்கு இப்படிப்பட்ட ஆதரவை பார்த்திருக்கிறேன். பிறகு நான் ஆஸ்திரேலியா பயிற்சியாளராக வந்த பொழுது விராட் கோலிக்கு இருந்தது. ஆனால் தோனிக்கு மிகச் சிறப்பான ஆதரவு ரசிகர்களிடையே இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -