சிஎஸ்கே ரெய்னாவை விட்டுக்கொடுத்தாலும், ஒருபோதும் சிஎஸ்கேவை விட்டுக்கொடுக்காத ரெய்னா – லேட்டஸ்ட் ட்வீட்!

0
373

சிஎஸ்கே அணியில் உங்களுக்கு பிடித்த ஜெர்சி நம்பர் என்னவென்று கேட்டதற்கு அட்டகாசமான பதிலை ட்விட்டரில் கொடுத்திருக்கிறார் சுரேஷ் ரெய்னா.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தல மற்றும் தளபதி என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தவர்கள் தோனி மற்றும் ரெய்னா இருவரும் தான். சிஎஸ்கே அணியில் மிஸ்டர் ஐபிஎல் என்று இவருக்கு இன்னொரு பெயரும் உண்டு.

- Advertisement -

ஏனெனில் தொடர்ச்சியாக இடைவிடாமல் சென்னை அணிக்காக பங்களிப்பை கொடுத்து வந்திருக்கிறார். பல இக்கட்டான போட்டிகளில் இவர் ஒருவரே தனி நாளாக நின்று வெற்றி பெற்று தந்திருக்கிறார்.

சென்னை அணிக்காக கடந்த 2020 ஆம் ஆண்டு வரை ஒரு போட்டி விடாமல் அனைத்திலும் விளையாடி இருக்கிறார். தோனி இல்லாத தருணங்களில் கேப்டன் பொறுப்பேற்றும் விளையாடி உள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் துபாயில் நடைபெற்றது. அப்போது தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். இது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்சியை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சுரேஷ் ரெய்னா எடுக்கப்படவில்லை. இது மேலும் அதிர்ச்சியாக இருந்தது.

- Advertisement -

ரெய்னா மற்றும் சிஎஸ்கே நிர்வாகத்திற்கு இடையே என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்ற தொடர் கேள்விகளும் ரசிகர்கள் சிஎஸ்கே நிர்வாகத்தின் மீது எழுப்பினர். இருவருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு விட்டதா? என்றும் பலரும் எண்ணினர்.

ஆனால் ஒருபோதும் சிஎஸ்கே அணியை விட்டுக் கொடுக்காமல் பேசி வருகிறார் சுரேஷ் ரெய்னா. ட்விட்டர் பக்கத்தில், கமெண்டரியில் என்று எங்கும் சிஎஸ்கே வின் புகழை அவர் பாடத்தவறியதில்லை.

சமீபத்தில் சிஎஸ்கே அணியின் ட்விட்டர் பக்கம், ‘உங்களுக்கு பிடித்த சென்னை வீரர்களின் ஜெர்சி நம்பர் என்ன?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு முதல் ஆளாக சென்று பதில் அளித்திருக்கிறார் சுரேஷ் ரெய்னா. அவர் “7, 3 மற்றும் 8 என பதில் அளித்து, உங்களுடையது என்ன?” என்று கேள்வியும் எழுப்பினார்.

அதாவது ஜெர்சி நம்பர் 7 தோனியையும், 3 சுரேஷ் ரெய்னாவையும் மற்றும் 8 ரவீந்திர ஜடேஜாவையும் குறிக்கும்.

சிஎஸ்கே அணி ரெய்னாவை விட்டுக் கொடுத்தாலும், ரெய்னா ஒருபோதும் சிஎஸ்கே அணியை விட்டுக் கொடுத்ததில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.