மீண்டும் ஒரு முறை பினிஷராக நிரூபித்த ராகுல் திவாட்டியா ; கடைசி 30 பந்தில் 70 ரன்கள் விளாசி முதல் வெற்றியை ருசித்துள்ள குஜராத் டைட்டன்ஸ்

0
131
Rahul Tewetia 40 Off 24 vs LSG

ஐ.பி.எல்-ன் 15 வது சீசனின் மூன்றாவது நாளின் நான்காவது ஆட்டத்தில், புதிய அணிகளாக இடம் பெற்றுள்ள கே.எல்.ராகுல் தலைமையேற்கும் லக்னோ அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையேற்கும் குஜராத் அணியும் மோதின.

முதலில் டாஸில் வென்ற ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்ய, லக்னோ அணியின் சார்பாக ஆட்டத்தைத் துவங்க கேப்டன் ராகுலும் விக்கெட் கீப்பர் குயின்டன் டிகாக்கும் களமிறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் பந்திலேயே லக்னோ அணியின் கேப்டனை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார் ஷமி. மேலும் குயின்டன் டிகாக், மனீஷ் பாண்டேவையும் ஷமி கிளீன் போல்டாக்க, லக்னோ அணி 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

- Advertisement -

ஐந்தாவது விக்கெட்டாய் ஹூடாவும் ஆறாவது விக்கெட்டாய் வந்த அறிமுக வீரர் ஆயுஷ் பதோனியும் இணைந்து இருவரும் அரைசதமடித்து அணியை மீட்டெடுத்தனர். ஹூடா 55 [41] பதோனி 54 [41] என்று வெளியேற, இருபது ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 158/6 ரன்களை இலக்காய் குஜராத் அணிக்கு நிர்ணயித்தது.

இலக்கான 159 ரன்களை நோக்கி சுப்மன் கில்லும், மேத்யூ வேட்டும் களமிறங்க, இலங்கையின் சமீராவின் முதல் ஓவரிலேயே கில் வெளியேறினார். அடுத்து வந்த தமிழக வீரர் விஜய் சங்கரையும் சமீரா வெளியேற்ற, மேத்யூ வேட், கேப்டன் ஹர்திக் இணைந்து ஓரளவுக்கு அணியை மீட்டெடுத்த போது, ஹர்திக் பாண்ட்யா தன் அண்ணன் க்ரூணால் ஓவரில் விக்கெட் இழந்து வெளியேறினார். அடுத்து உடனே மேத்யூ வேட்டும் வெளியேற, ஆட்டம் லக்னோவின் பக்கமாய் சாய்ந்து விட்டது.

இந்த நிலையில்தான் மில்லரும் திவாட்டியாவும் இணைந்து பொறுமையாய் ஆட்டத்தை நகர்த்த தொடங்கினர். பிரதான பந்து வீச்சாளர்களுக்கு ஓவர்கள் இருந்தும் கேப்டன் ராகுல் 16வது ஓவரை ஹூடாவுக்கு தர, திவாட்டியாவும் மில்லரும் 22 ரன்களை குவித்து ஆட்டத்தை அப்படியே மாற்றி விட்டார்கள். அடுத்த 17வது ஓவரை பிஷ்னோய் வீச அந்த ஓவரிலும் திவாட்டியா சிக்ஸ் ஃபோர் என அதிரடி காட்ட மொத்தமாய் ஆட்டம் குஜராத் பக்கம் வந்துவிட்டது. ஆட்டத்தின் ஓவரின் நான்காவது பந்தில் பவுண்டரி அடித்து திவாட்டியா தித்திப்பாய் ஆட்டத்தை முடித்தும் வைத்துவிட்டார்.

- Advertisement -

இறுதிக்கட்டத்தில் மில்லர் 30 [21] திவாட்டியா 40* [24] அபினவ் மனோகர் 15 [7] என மூவரும் பேட்டிங்கில் அதிரடி காட்டியதும், பந்துவீச்சில் ஷமி கலக்கியதும். குஜராத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளது!