10 ஃபோர்ஸ்.. 2 சிக்ஸ்.. டிராவிட்டின் இளைய மகனும் அசத்தல் சதம்.. 441 ரன்கள் குவித்த கர்நாடக அணி

0
571

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான விஜய் மெர்ச்சண்ட் டிராபி 2024-25 தொடரில் கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் அணிகள் மோதி விளையாடியது.

இதில் கர்நாடகா அணிக்காக விளையாடிய ராகுல் டிராவிட்டின் இளைய மகனான அன்வே டிராவிட் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய உள்நாட்டு கிரிக்கெட் தொடர்

இந்தியாவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான விஜய் மெர்ச்சண்ட் டிராபி கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் லீக் போட்டியில் கர்நாடகா மற்றும் ஜார்கண்ட் அணிகள் மோதி விளையாடின. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜார்கண்ட் அணி 128.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 387 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் தாகித் 177 பந்துகள் எதிர்கொண்டு 98 ரன்கள் குவித்தார்.

பந்துவீச்சில் கர்நாடகா அணியின் சுகுருத் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதற்குப் பிறகு கர்நாடகா அணி தனது முதல் இன்னிங்ஸ் களமிறங்கி விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஆர்யா ஜே கவுடா மற்றும் கேப்டன் துருவ் கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். இதில் 246 பந்துகளை எதிர்கொண்ட ஆர்யா 18 பவுண்டரியோடு 104 ரன்கள் குவிக்க மறுமுனையில் கேப்டன் கிருஷ்ணன் 190 பந்துகளை எதிர் கொண்டு 14 பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸ் என 122 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தனர்.

- Advertisement -

ராகுல் டிராவிட் இளைய மகன் சிறப்பான ஆட்டம்

அதற்குப் பிறகு இதில் மிடில் வரிசையில் விக்கெட் கீப்பரான இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டின் இளைய மகனான அன்வே டிராவிட் களம் இறங்கினார். மிகச் சிறப்பாக இன்னிங்ஸ் விளையாடி டிராவிட் 153 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் என 100 ரன்கள் குவித்த நிலையில் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். தனது தந்தை முன்னர் இந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பாக விளையாடியதைப் போலவே தற்போது அவரது மகன் உள்நாட்டுத் தொடரில் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்து இருக்கிறார்.

இதையும் படிங்க:ரிஷப் பாய் ஏன் அப்படி செஞ்சாரு.. அது எனக்கு மர்மமா இருந்துச்சு.. முக்கிய போட்டியை நினைவு கூறும் அர்ஸ்தீப் சிங்

இந்த நிலையில் கர்நாடகா அணியின் 123.3 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 441 ரன்கள் குவித்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுற்றதால் இந்தப் போட்டி இரண்டு அணிகளுக்கும் இடையே வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிவடைந்தது. உள்நாட்டுத் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் டிராவிட் விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்

- Advertisement -