ரிஷப் பாய் ஏன் அப்படி செஞ்சாரு.. அது எனக்கு மர்மமா இருந்துச்சு.. முக்கிய போட்டியை நினைவு கூறும் அர்ஸ்தீப் சிங்

0
299

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு ரத்தாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளரான அர்ஸ்தீப் சிங் ரிஷப் பண்ட் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்த ஆண்டு பொன்னான ஆண்டாக அமைந்திருக்கிறது என்றே கூறலாம். ஏனென்றால் இந்த ஆண்டு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வெற்றி பெற்று வரலாறு படைத்தது. 2007ம் ஆண்டு மகேந்திர சிங் தோனிக்கு பிறகு இந்த ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் விராட் கோலி, பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் விளையாடிய விதம் முக்கிய பங்காற்றியது.

அதையெல்லாம் தாண்டி ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி ஜெயிக்கும் நிலைமையில் இருந்த போது விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அந்த சமயத்தில் காயம் அடைந்தது போல நடித்து தென்னாப்பிரிக்க அணியின் வெற்றி பெறும் சூழ்நிலையை அப்படியே மாற்றினார். அது இந்திய அணிக்கு குறிப்பிடத்தக்க வகையில் மாற்றுத்திட்டத்தை யோசிக்க பயனுள்ள வகையில் அமைந்தது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் ரிஷப் பண்ட் செய்தது குறித்து தற்போது மனம் திறந்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாகக் கூறும்போது “இறுதிப் போட்டியில் அந்த சமயத்தில் கடைசி மூன்று பந்துகளில் 30 ரன்கள் எங்களுக்கு தேவைப்பட்டபோது ரிஷப் பாய் பிசியோவிடம் சிகிச்சை பெற்றார். அப்போது எங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி ஏற்பட்டது. அப்போது என்ன நடக்கிறது என்று புரியவில்லை. ஆனால் அந்த நேரத்தில் நான் இது ஒரு விளையாட்டை மாற்றக்கூடிய தருணமாக இருக்கலாம் என்று நினைத்தேன். அவருக்கு உண்மையிலேயே அந்த சிகிச்சை தேவைப்பட்டதா? என்று எங்களுக்கு தெரியாது.

இதையும் படிங்க:ஆர்சிபி மட்டும் இப்படி செஞ்சா.. அதைவிட சந்தோஷம் எனக்கு எதுவும் இல்லை – ராஜத் பட்டிதார் பேட்டி

ஆனால் அதற்குப் பிறகு ஹர்திக் பாய் விக்கட்டை வீழ்த்தியதும் பும்ரா பாய் போட்டியில் அழுத்தத்தை உருவாக்கியதும் அதற்குப் பிறகு நடைபெற்றது. அந்த சமயத்தில் தான் நாங்கள் போட்டியை வெல்ல முடியும் என்று நம்பினோம். நாங்கள் எங்கள் திட்டத்தை கவனமாக செயல்படுத்தினோம். போட்டியை எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தோம். இறுதியில் போட்டியையும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினோம் ” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -