“உலக கோப்பைக்கு பின் ராகுல் டிராவிட் மாற்றப்பட்டு இவர்தான் பயிற்சியாளராக வருவார்” – அஷ்வின் நண்பர் அனலைசர் பிரசன்னா பரபரப்பு செய்தி!

0
625

2021 ஆம் ஆண்டில் துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையோடு ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் .

அவரது தலைமையின் கீழ் இந்திய அணி வலுவான ஒரு அணியாக உருவாகும் என்று இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்களும் விமர்சகர்களும் மற்றும் ரசிகர்களும் எதிர்பார்த்தனர் . ஆனால் இந்த ஒன்றரை ஆண்டு காலங்களில் இந்திய அணி குறிப்பிடத்தக்க அளவில் எந்த ஒரு பெரிய போட்டிகளையும் வெற்றி பெறவில்லை .

- Advertisement -

ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா கூட்டணியில் இந்திய அணியின் அதிகபட்ச வெற்றி என்றால் 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது ஆகும்.

2022 ஆம் ஆண்டின் டி20 உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு ராகுல் டிராவிட்டை டி20 பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கலாம் என்று கூட பல கருத்துக்கள் எழுந்தது. ஆயினும் பிசிசிஐ நிர்வாகம் அது தொடர்பாக எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. இந்த வருட 50 ஓவர் உலகக்கோப்பையோடு ராகுல் டிராவிட் மற்றும் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது.

உலகக்கோப்பை ஒருவேளை இந்திய அணி வெற்றி பெற்றால் இதே பயிற்சியாளர்கள் நீடிக்கப்படுவார்களா என்று தெரியாது. ஆனாலும் அவர்களது பதவி காலம் முடிவடைய இருப்பதால் அடுத்த பயிற்சியாளராக யார் நியமிப்பார்கள் என்ற கேள்வியும் இருந்திருக்கிறது . இந்நிலையில் அதனை பற்றிய செய்தி ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.

- Advertisement -

இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ஆன்ட்டி பிளவர் நியமிக்கப்படுவார் என்று சில செய்திகள் தெரிவிக்கின்றன. இவரது பயிற்சி காலத்தின் கீழ் இங்கிலாந்து அணி வலுவான அணியாக மாறியதும் குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் அணியின் தலைமை புரட்சியாளராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்த உடன் இவர் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக இந்திய அணியின் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் நண்பரும் பிரபல கிரிக்கெட் அனலைசர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.