“நானும் ரோகித்தும் எப்பவும் பேசறது இதைத்தான்.. லக்ஷ்மணன் ஞாபகத்துக்கு வருவாரு” – ராகுல் டிராவிட் பேட்டி

0
440
Dravid

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தோற்று மீதம் நான்கு போட்டியிலும் 112 ஆண்டுகளுக்கு பிறகு வென்ற அணியாக இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சாதித்திருக்கிறது.

நடைபெற்று முடிந்திருக்கும் இந்த டெஸ்ட் தொடர் இந்திய கிரிக்கெட்டில் மிக நீண்ட காலம் ஞாபகம் வைத்திருக்கும் ஒரு தொடராக அமைந்திருக்கிறது. முன்னணி வீரர்கள் இல்லாத பொழுது, ஐந்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு, அதிரடியாக விளையாடக்கூடிய பெரிய அணியான இங்கிலாந்துக்கு எதிராக, இந்திய அணி நான்குக்கு ஒன்று என வெற்றி பெற்றிருப்பது, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்தத் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பிறகு இந்திய சுழல் பந்து வீச்சு யூனிட்டை யார் முன்னின்று வழிநடத்துவார்கள் என்கின்ற கேள்விக்கும் பெரிய பதில் கிடைத்திருக்கிறது. குல்தீப் யாதவ் எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட்டின் தலைமைச் சுழற் பந்து வீச்சாளராக இருக்கப் போவது இந்த தொடரில் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

மொத்தம் அவர் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 20.15 ரன் சராசரியில் மொத்தம் 19 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இதில் பேட்டிங்கிலும் சில முக்கியமான நேரத்தில் முக்கியமான ரன்களை கொண்டு வந்திருக்கிறார். அக்சர் படேல் பேட்டிங் நன்றாக செய்வதால் வாய்ப்பை பெறுகிறார் என்கின்ற காரணத்தினால், குல்தீப் யாதவ் பேட்டிங்கில் கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டு சாதித்திருக்கிறார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா காயம் அடைய, அவருடைய இடத்திற்கு வாஷிங்டன் சுந்தரை கொண்டு வராமல், ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் குல்தீப் யாதவை கொண்டு வந்தார்கள்.அவர் இரண்டாவது போட்டியில் சிறப்பாக செயல்பட, ரவீந்திர ஜடேஜா மூன்றாவது போட்டிக்கு திரும்பியதும், அக்சர் படேலை நீக்கினார்கள்.

- Advertisement -

இந்த முக்கியமான முடிவுக்கு குறித்து பேசி உள்ள ராகுல் டிராவிட் கூறும் பொழுது ” ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்வதற்கு அக்சர் படேல் வெளியே போகும் பொழுது, நான் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரிடம், இந்த பொசிஷனில் முன்பு விவிஎஸ் லட்சுமணன் செல்வார் என்று கூறினேன். அக்சர் மிகவும் அழகான ஒரு வீரர்.

இதையும் படிங்க :வெறித்தனமா இருக்காதிங்க.. ப்ளீஸ் டைம் அவுட் பிரச்சினையில் இருந்து வெளியே வாங்க” – இலங்கை அணிக்கு பங்களாதேஷ் கேப்டன் அறிவுரை

டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 விக்கெட்டுகள் எடுக்க முடிந்தால் மட்டும்தான் வெற்றி பெற முடியும். நானும் ரோகித் சர்மாவும் எப்பொழுதும் இது குறித்துதான் பேசிக் கொண்டிருப்போம். நாங்கள் இதற்காக அக்சர் இடத்தில் குல்தீப் யாதவை கொண்டு வரும் தைரியமான முடிவை எடுத்தோம். அது நல்ல பலன் தந்திருக்கிறது. இதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று கூறியிருக்கிறார்.