நான் விராட் கோலி பற்றி இதை சொல்வது.. அவருக்கு பிடிக்காமல் போகலாம்.. ஆனா இது வரலாறு – ராகுல் டிராவிட் பேச்சு

0
112
Dravid

கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கு அவர்களுடைய உயரம் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து ராகுல் டிராவிட் ரவிச்சந்திரன் அஸ்வின் உடனான உரையாடலில் மிகவும் விளக்கமாக பேசியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட்டில் தான் விளையாடிய காலகட்டத்தில் தன்னுடன் விளையாடிய ஜாம்பவான் வீரர்களிடம் இருந்து தான் கற்றுக் கொண்டதாகவும், ஆனால் தான் அவர்களை எந்த இடத்திலும் பின்பற்றவில்லை என்பதையும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

குள்ளமாக இருப்பதின் நன்மை

இது குறித்து ராகுல் டிராவிட் பேசும் பொழுது ” கவாஸ்கர் எப்பொழுதும் சம நிலையான அழகான ஒரு வீரர். இதை நான் எப்பொழுதும் பார்த்திருக்கிறேன். அவர் நிற்கும் பொழுது ஒரு அமைதி தெரிந்தது. நான் அதைத்தான் ரசித்தேன். ஆனால் நான் அவரை விட உயரமாக இருந்தேன். அதனால் நான் எதையும் பின்பற்றவில்லை. நான் சங்கட்டமாக உணரும் வகையில் கிரீசில் நின்றேன்”

“இதற்கு அடுத்து சச்சின் நிற்கும் பொழுது மிகவும் சமநிலை ஆனவராக இருந்தார். குள்ளமாக இருப்பவர்களுக்கு புவியீர்ப்பு மையம் குறைவாக இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் மிகவும் சமநிலையாக இருக்கிறார்கள். அவர்கள் கிரீசில் மிகவும் பேலன்ஸாக இருப்பது பேட்டிங் செய்யும்பொழுது சாதகத்தை உருவாக்குகிறது”

- Advertisement -

விராட் கோலிக்கு பிடிக்காமல் போகலாம்

“இவர்கள் நமக்கு சொல்வது என்னவென்றால் காலம் காலமாக உயரம் குறைவான பேட்ஸ்மேன்கள் சிறந்தவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். கவாஸ்கர், சச்சின், லாரா, பிராட் மேன் மற்றும் விராட் கோலி என இந்த பட்டியல் நீள்கிறது. நான் விராட் கோலியை குள்ளமானவர் என்று சொல்வது அவருக்கு பிடிக்காமலும் போகலாம்”

இதையும் படிங்க : லோக்கல் டெஸ்ட் ஆடற என்னால ஆசிய கப்ல டி20 ஆட முடியாதா.. அவங்க என்னமோ பண்ணட்டும் – ஷமி கருத்து

“அதேசமயத்தில் இப்பொழுது ஆட்டம் மிகவும் மாறி வருகிறது. இங்கு பெரிய சிக்ஸர்கள் அடிப்பது மற்றும் பவர் ஹிட்டிங் என மாறி இருக்கிறது. எனவே உயரமாக இருப்பவர்களுக்கு நல்ல ரீச் கிடைக்கிறது. கெவின் பீட்டர்சன், பொல்லார்ட் நல்ல உதாரணம். குறிப்பாக உயரமாக இருப்பது டி20 கிரிக்கெட்டுக்கு சாதகமாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -