ரோகித்துக்கு அதுக்காகவே நன்றி.. இது குடும்பம் மாதிரி.. இந்த பசங்க அன்பை இழக்க போறேன் – டிராவிட் உருக்கமான பேச்சு

0
1244
Dravid

இன்று டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் வெற்றி விழாவால் மும்பை வான்கடே மைதானம் குலுங்கியது. இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசிய உருக்கமான விஷயம் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடர் இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கடைசி தொடராக அமைந்தது. அவருடைய பதவி காலம் முடிவடைந்த நிலையில் அவர் மேற்கொண்டு இந்திய பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்கவில்லை. புதிய பயிற்சியாளராக கம்பீர் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரை வென்று தங்கள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு அருமையான பிரிவு உபச்சார விழாவை நடத்தி முடித்திருக்கிறது. ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக விளையாடிய காலகட்டத்தில் உலகக் கோப்பை தொடரை வென்ற அணியில் இடம் பெற்றது இல்லை. அவருடைய நீண்ட கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்த ஒரு ஏக்கம் இந்த இந்திய அணியால் முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து பேச வந்த ராகுல் டிராவிட் குரல் தழுதழுத்தது. அதைக் கட்டுப்படுத்தி பேசிய அவர் “இது கையொப்பமிடுவதற்கான அருமையான குறிப்பாக அமைந்திருக்கிறது. நான் இந்த அன்பை இனி இழக்கப் போகிறேன். அருமையான வீரர்கள் மற்றும் அணி ஊழியர்களுடன் பணி புரியும் வாய்ப்பை தவற விடப் போகிறேன். இதை ஒப்புக் கொள்வதில் எந்த தயக்கமும் எனக்கு கிடையாது. இன்று நான் பார்த்துக் கொண்டிருப்பதும் வெற்றியில் கேள்விப்பட்டு கொண்டிருப்பதும் இந்திய கிரிக்கெட் எவ்வளவு புத்திசாலித்தனமானது என்பதை காட்டுகிறது.

இந்த வீரர்கள் ஒரு குடும்பத்தைப் போலானவர்கள். இவர்கள் இவர்கள் உழைத்த உழைப்பின் அளவு மிகப்பெரியது. அதை வார்த்தைகளால் அடக்க முடியாது. மேலும் தொடர்ந்து சிறப்பாக வருவதை பார்க்கிறார்கள். பயிற்சியாளர் மற்றும் துணைப் பயிற்சியாளர் என்ற முறையில் நாங்கள் இவர்களிடம் இதுக்கு மேல் எதுவும் கேட்க முடியாது.இந்த அணிக்கு பயிற்சியாளராக இருந்தது என்னுடைய பாக்கியம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : கோலி செய்த ஒரு காரியம்.. உணர்ச்சி பிழம்பாய் கொந்தளித்த வான்கடே.. 10 உலகக்கோப்பை வெற்றிக்கு சமம்

மேலும் இதே நிகழ்வில் ஆரம்பத்தில் பேசிய ராகுல் டிராவிட் ” என்னை மேலும் ஒரு ஆறு மாத காலம் இந்திய அணியில் பயிற்சியாளராக வரும்படி ரோகித் சர்மா போன் செய்தார். என் வாழ்க்கையில் வந்த மிகப்பெரிய போன் அழைப்பு அது. இதற்காகவே நான் ரோகித் சர்மாவுக்கு பெரிய நன்றி சொல்வேன்” என்று கூறினார்.