இந்திய கிரிக்கெட்

தோனி இடம் ரிஷப் பண்ட்க்கு என்று சொல்ல மாட்டேன்.. பையன் இந்த மாதிரிதான் – ராகுல் டிராவிட் பேட்டி

இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி இடத்திற்கு கொண்டுவரப்பட்டவர் ரிஷப் பண்ட் என்று தான் கூறமாட்டேன் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

நடக்க இருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய ரசிகர்கள் மட்டும் இல்லாமல் ஆஸ்திரேலியா கிரிக்கெட் ரசிகர்களும் ரிஷப் பண்டின் அதிரடியான பேட்டிங்கை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அவருக்கு தனிப்பட்ட முறையில் ஆஸ்திரேலியாவில் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உருவாகி வருகிறது.

கடந்த முறை கப்பாவின் கதாநாயகன்

இந்திய அணியின் கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் இளம் வீரர்கள் மிகச்சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி இந்திய அணி தொடரை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தார்கள். இந்திய மூத்த வீரர்கள் தனிப்பட்ட காரணத்தாலும் காயத்தாலும் தொடரில் இருந்து விலகிக் கொண்டே வந்தார்கள். இருந்த போதும் இந்திய அணி தொடரை வென்று வரலாறு படைத்தது.

இதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக விளையாடிய ரிஷப் பண்ட் மிக முக்கியமானவராக பார்க்கப்படுகிறார். தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் இருந்த பொழுது கடைசி டெஸ்ட் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 89 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றி பெற வைத்ததோடு தொடரையும் வெல்ல வைத்தார். இந்த அதிரடி இன்னிங்ஸ் காரணமாக அவருக்கு ஆஸ்திரேலியாவில் தற்போது பெரிய அளவில் ரசிகர்கள் உருவாகி வருகிறார்கள்.

- Advertisement -

தோனி இடத்துக்கு என்று சொல்ல மாட்டேன்

இதுகுறித்து ராகுல் டிராவிட் தெரிவிக்கும்போது ” ரிஷப் பண்ட் கடந்த முறை ஆஸ்திரேலியாவில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று நான் நினைக்கிறேன். கடைசியாக கப்பாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், அனுபவம் குறைவான ஒரு அணியில் இருந்து, ரிஷப் பண்ட் நம்பிக்கை உடன் இலக்கை துரத்தி இந்திய அணியை வெல்ல வைத்தது, அழுத்தத்தின் கீழ் அவர் விளையாடிய விதம் அபாரமான ஒன்று!”

இதையும் படிங்க : ஐசிசி டி20 ரேங்கிங்.. சூர்யாவை தாண்டிய திலக்.. சாம்சனுக்கு வினோத உயர்வு.. ஹர்திக் பாண்டியா கலக்கல்

“ரிஷப் பண்ட் தண்ணீரில் வாத்து போல டெஸ்ட் கிரிக்கெட்டுக்குள் மிக எளிதாக அழைத்துச் செல்லப்பட்டு விட்டார். இது அவருக்கு மிகவும் தனிச்சிறப்பான விஷயமாக அமைந்திருக்கிறது. தோனி இந்திய அணியில் இருந்து வெளியேறிய பிறகு அவரது இடத்திற்கு சரியான ஆள் வர காலம் பிடிக்கும் என்று நீங்கள் நினைத்தீர்கள். நான் ரிஷப் பண்ட் அவருடைய இடத்திற்கு வந்துவிட்டார் என்று சொல்லவில்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் செயல்பாடுகள் மிகவும் பரபரப்பானவை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by