இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் தனது இளைய மகனுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றது பரபரப்பான விஷயமாக கிரிக்கெட் உலகத்தில் பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு சில காலம் ஐபிஎல் தொடரில் விளையாடினார். பிறகு இந்திய 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணிக்கும் அடுத்து இந்திய ஏ அணிக்கும் தலைமை பயிற்சியாளராக இருந்தார். பிறகு இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக வந்து 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்றார். தற்பொழுது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கிறார்.
ராகுல் டிராவிட் இரு மகன்கள்
ராகுல் டிராவிட்டுக்கு சமித் டிராவிட் மற்றும் அன்வே டிராவிட் என இரு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே கர்நாடக வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணிகளில் விளையாடுகிறார்கள். தற்போது ராகுல் டிராவிட் தனது இளைய மகனான அன்வே டிராவிட் உடன் இணைந்து கர்நாடக கிரிக்கெட் மூன்றாவது டிவிஷன் போட்டியில் விஜயா கிரிக்கெட் கிளப்புக்காக விளையாடி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
இதில் எதிர்பாராத விதமாக எதிர்த்து விளையாடிய யங் லயன்ஸ் கிளப்பினர் ஆச்சரியமடைந்தார்கள். நீண்ட காலத்திற்குப் பிறகு ராகுல் டிராவிட் கிரிக்கெட் களத்திற்கு திரும்பியதும், மேலும் தன் தந்தையுடன் இணைந்து விளையாட அன்வே டிராவிட் பெரிதும் விரும்பி காத்திருந்ததும் களத்தை மிகவும் உற்சாகமாக மாற்றியது.
தந்தையை மிஞ்சிய மகன்
ராகுல் டிராவிட் மற்றும் அன்வே டிராவிட் இடையே ஒரு சிறிய பார்ட்னர்ஷிப் உருவானது. 10 ரன்கள் மட்டும் எடுத்த ராகுல் டிராவிட் பெரிய ஷார்ட் விளையாடும் முயற்சியில் விக்கெட்டை இழந்தார். அதே சமயத்தில் அன்வே டிராவிட் 58 பந்தில் 60 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் தந்தையும் மகனும் விளையாடிய விஜய் கிரிக்கெட் கிளப் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
இதையும் படிங்க : ரோகித் பாய் எனக்கு கொடுத்த பொறுப்பு.. களத்துக்கு உள்ள வெளியே இத செய்றேன் – துணை கேப்டன் கில் பேட்டி
இந்த நிகழ்ச்சி இந்த போட்டியை பார்க்க வந்த ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியம் அளிப்பதாகவும் உற்சாகமானதாகவும் அமைந்தது. தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஐபிஎல் தொடரில் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் வந்திருக்கிறார். இந்த நிலையில் கிரிக்கெட் களத்திற்கும் திரும்பியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியானதாக அமைந்திருக்கிறது.






