“ராகுல் டிராவிட் பயிற்சியாளராக வெறும் பூஜ்யம்; அவர் நினைப்பது கடவுளுக்குத்தான் தெரியும்” – பாகிஸ்தான் முன்னாள் வீரர் சரமாரி விமர்சனம்!

0
553
Dravid

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி நிர்வாகத்தின் முடிவுகள் பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன!

இந்தப் போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு இடம் தராதது தற்பொழுது சர்ச்சையாகி வருகிறது.

- Advertisement -

அதேசமயத்தில் ஆஸ்திரேலியாவின் சுழற் பந்துவீச்சாளர் நாதன் லயன் மிகச் சிறப்பாக விளையாடிய ஜடேஜாவின் விக்கெட்டை வீழ்த்தி இந்தச் சர்ச்சைக்கு தூபம் போட்டு இருக்கிறார்.

இன்னொரு பக்கத்தில் டாஸ் போடப்படும் பொழுது இருந்த வானிலையை மனதில் வைத்து பயந்துகொண்டு பந்துவீச்சை தேர்ந்தெடுத்ததாக இன்னொரு சர்ச்சை போய்க் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளரும் வீரருமான பசித் அலி பேசும் பொழுது ” முதல் இரண்டு மணி நேரம் மேகமூட்டமாக இருந்ததை வைத்து பந்துவீச்சை தேர்ந்தெடுத்த இடத்திலேயே இந்திய அணி தோற்றுவிட்டது. மேலும் ஐபிஎல் தொடர் போல சாதாரண பந்துவீச்சுதான் இருந்தது. மதிய உணவு இடைவேளையின் போதே இந்திய பந்துவீச்சாளர்கள் தாங்கள் போட்டியை வென்று விட்டது போல நினைத்தார்கள்.

- Advertisement -

இப்போது இந்தியா செய்ய வேண்டியது அவர்களை சீக்கிரத்தில் ஆல் அவுட் செய்வதும், நான்காவது இன்னிங்ஸில் ஏதாவது அதிசயம் நடக்கும் என்று நம்புவதும்தான். இந்தப் போட்டியில் விராட் கோலி, ரகானே மற்றும் ஜடேஜா மூவரும்தான் உடற்பகுதியுடன் இருந்ததுபோல் தெரிந்தது. மற்ற வீரர்கள் எல்லோரும் களைப்பாகவே தெரிந்தார்கள்.

நான் ராகுல் டிராவிட்டின் மிகப்பெரிய ரசிகன். அவர் ஒரு கிளாஸ் பிளேயர், லெஜன்ட். ஆனால் ஒரு பயிற்சியாளராக அவர் வெறும் பூஜ்யம்தான். நீங்கள் ஆஸ்திரேலியா இந்தியா வந்த பொழுது திரும்பும் விக்கெட்டுகளை அமைத்தீர்கள். ஆனால் நீங்கள் ஆஸ்திரேலியா சென்ற பொழுது அவர்கள் அப்படியான விக்கட்டைதான் தந்தார்களா? அவர்கள் பவுன்ஸ் ஆகும் ஆடுகளங்களைத் தந்தார்கள்தானே. ராகுல் டிராவிட் என்ன நினைக்கிறார் என்று கடவுளுக்குத்தான் தெரியும்!” என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்!

- Advertisement -