ராகுல் டிராவிட்டுக்கு காயம்.. மகனுடன் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய போது ஏற்பட்ட சோகம்.. என்ன நடந்தது?

0
67

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டனும் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் தனது மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவருடன் இணைந்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

கர்நாடகா டிவிஷனில் மூன்றாவது பிரிவில் உள்ள விஜயா கிரிக்கெட் கிளப் என்ற அணியில் ராகுல் டிராவிட்டும், 16 வயது மகனான அன்வே டிராவிட்டும் விளையாடி வருகின்றனர். அவர் தனது தந்தையுடன் விளையாட வேண்டும் என மிகுந்த ஆசைப்பட்டதால் டிராவிட் ஓய்வில் இருந்து திரும்ப வந்து தனது மகனுடன் இணைந்து ஒரே அணியில் விளையாடுகிறார்.

- Advertisement -

மகனுடன் பேட்டிங் செய்த டிராவிட்:

இந்த சூழலில் இன்றைய ஆட்டத்தில் ராகுல் டிராவிட்டும், அன்வே டிராவிட்டும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்போது ராகுல் டிராவிட் கொஞ்சம் அதிரடி காட்டி விளையாடினார். 28 பந்துகளை எதிர் கொண்ட அவர் 29 ரன்கள் சேர்த்தார். இதில் ஆறு பவுண்டரிகள் அடங்கும்.

ராகுல் டிராவிட் 103 என்ற அளவில் அவருடைய ஸ்ட்ரைக் ரைட்டை வைத்திருந்தார். ஆனால் டிராவிட்டுக்கு 52 வயது ஆனதால் அவர்களுக்கு உடல் தகுதியில் சிக்கல் ஏற்பட்டது. பேட்டிங் அவருக்கு நன்றாக வந்தாலும், அவனுடைய உடல் ஒத்துழைக்காததால் அவருக்கு காயம் ஏற்பட்டது.

- Advertisement -

காயத்தால் வெளியேறிய டிராவிட்:

இதனால் பேட்டிங்கை தொடர முடியாத நிலையில் ராகுல் டிராவிட் ரிட்டய்ர்ட் ஹர்ட் பெற்று களத்தை விட்டு வெளியேறினார். அதேபோன்று டிராவிட்டின் மகன் அன்வே டிராவிட் 56 பந்துகளை எதிர் கொண்டு 22 ரன்கள் சேர்த்தார்.இதே மைதானத்தில் கடந்த மாதம் ராகுல் டிராவிட்டிற்கும் அவருடைய மகனும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.

இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி.. 30 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்த இந்தியா.. ரோகித், கோலி நடையை கட்டினர்.. நியூசிலாந்து அபாரம்

தனது தந்தையுடன் விளையாடிய நிகழ்வை மறக்க முடியாது என்று அன்வே டிராவிட் கூறியிருந்தார். தற்போது ராகுல் டிராவிட் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணிபுரிய இருக்கின்றார். இந்த தொடருக்கு தயாராகுவதற்கு உடல் தகுதியை பெரும் முனைப்பில்தான் டிராவிட் இந்த உள்ளூர் போட்டியில் விளையாடியதாக தெரிகிறது. தற்போது ராகுல் டிராவிட்டிற்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அவர் பயிற்சியாளர் பணியை செய்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -