சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஒரு சமிபிரதாய ஆட்டமாக தான் இருக்கும் என்றாலும் அரையிறுதியில் யாரை எதிர்கொள்ளப் போகிறோம் என்பது இந்த போட்டியின் முடிவில் தெரியவரும்.
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி ஆஸ்திரேலியாவையும் தோற்கும் அணி தென்னாப்பிரிக்காவையும் அரை இறுதியில் எதிர்கொள்ளும். இந்த சூழலில் துபாயில் இந்த தொடர் முழுவதும் இந்திய அணி சேஸிங் செய்திருக்கிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்தியா பேட்டிங் செய்ய திட்டமிட்டு இருந்தது. ஆனால் டாசை வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சாட்னர் முதலில் பந்து வீசுவதாக கூறினார்.
நடையை கட்டிய கில், ரோகித்:
இதை அடுத்து இந்திய அணி இன்று தொடரில் முதல்முறையாக பகல் நேரத்தில் பேட்டிங் செய்தது. அரை இறுதிக்கு முன்பு இவ்வாறு இந்தியா முதலில் பேட்டிங் செய்வது நல்ல அனுபவத்தை கொடுக்கும் என கவாஸ்கர் கூறியிருந்தார். கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோர் தொடக்க ஜோடியாக விளையாடினர்.
ரோகித் சர்மா ஒரு பவுண்டரி ,ஒரு சிக்சர் என பட்டையை கிளப்ப கில் ஏழு பந்துகளில் வெறும் இரண்டு ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இந்த சூழலில் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இந்த ஜோடி இந்தியாவை சரிவிலிருந்து மீட்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோகித் சர்மா 15 ரன்களில் ஒரு ஷார்ட் ஆட முற்பட்டு கேட்ச் ஆனார்.
கோலி ஏமாற்றம்:
இதனால் விராட் கோலி தலையிலே அனைத்து பொறுப்பும் மீண்டும் வந்து விழுந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த அதே உத்வேகத்துடன் விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் களமிறங்கினார். ஆனால் அவர் 14 பந்துகளில் வெறும் 11 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
இதையும் படிங்க: நியூசி இந்தியாவுக்கு கொடுத்த செம சான்ஸ்.. கம்பீர் செய்த மாஸ் மூவ்.. இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி
இதன் மூலம் இந்திய அணி 30 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஹென்றி இரண்டு விக்கெட்டுகளையும், ஜெமிசன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார்கள். முதலில் பேட்டிங் செய்து இந்திய அணி தடுமாறுவது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.






