உலக கோப்பைல 15 தடவ டிராவிஸ் ஹெட்டுக்கு இது நடந்துச்சு.. கப் ஜெயிக்கணும்னா திறமையோட இதுவும் அவசியம் – ராகுல் டிராவிட் பேட்டி

0
83

கடைசியாக 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி அதற்குப் பிறகு 17 வருடங்கள் கழித்து 2024ஆம் ஆண்டு திரும்பவும் ரோஹித் சர்மா தலைமையில் டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

இருப்பினும் சொந்த மண்ணில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பையில் வெற்றிக்கு அருகாமையில் வந்து இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த நிகழ்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்று குஜராத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் எதிர்பாராத விதத்தில் தோல்வி அடைந்தது. சொந்த மண்ணில் உலகக் கோப்பை நடைபெற்றதால் இந்திய அணி நிச்சயமாக இந்த முறை ஒரு நாள் உலக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அடைந்தது.

கடைசியாக சொந்த மண்ணில் 2011ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி ஒரு நாள் உலகை கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு நாள் உலக கோப்பையில் ஆஸ்திரேலியா அணியின் ட்ராவிஸ் ஹெட் சிறப்பாக செயல்பட்டு சதம் விளாசி இந்திய அணியிடமிருந்து வெற்றியை பறித்தார். ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை வெல்ல ஹெட்டின் ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்து.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஹெட் குறித்து கூறும் போது “எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நமது வீரர்கள் வீசிய பந்துகளில் 15 முறை ஹெட் அவரது பேட்டால் அந்த பந்துகளை தொடவில்லை. 15 முறை ஹெட்டின் பேட்டை வீழ்த்தினோம். சில நேரங்களில் விஷயம் உங்களுக்கு சாதகமாக இருப்பது போல அமையும். ஆனால் அவை செயல் முறையில் நடந்தால் மட்டுமே சாத்தியம். அதற்குப் பிறகு அதனைப் பற்றி சிந்திக்க நேரம் கிடைத்தது.

அந்த சமயத்தில் நாம் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் சிந்திக்க நேரம் கிடைத்தது. சில நேரங்களில் செயல்முறை விஷயங்களை சரியாக செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அப்போதுதான் முடிவு உங்கள் வழியில் கிடைக்கும். ஆனால் சில நேரங்களில் நாள் முடிவில் கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை. அது இருந்தால் மட்டுமே எதுவும் சாத்தியமாகும்.ஆனால் சில நேரங்களில் திறமை அவசியம்.

இதையும் படிங்க:விராட் ரோகித் கிடையாது.. இந்த இந்திய வீரரை தான் ஆஸ்திரேலிய ரசிகர்கள் விரும்புகிறார்கள் – மேத்யூ ஹைடன் பேச்சு

கோட்டின் ஒரு அங்குளத்திற்குள் கால் வைக்கக்கூடிய பையன் எங்களுக்கு அவசியம்” என்று கூறி இருக்கிறார். அவர் பையன் என்று கூறியது தற்போது நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் சூரியகுமார் யாதவ் கடைசி ஓவரில் பிடித்த அந்த அபாரமான கேட்சை நினைவுபடுத்தி ராகுல் டிராவிட் கூறியிருக்கிறார்.

- Advertisement -