விராட் ரோகித் கிடையாது.. இந்த இந்திய வீரரை தான் ஆஸ்திரேலிய ரசிகர்கள் விரும்புகிறார்கள் – மேத்யூ ஹைடன் பேச்சு

0
164
Hayden

நேற்று சியட் கிரிக்கெட் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் இந்திய அணியின் ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணம் குறித்து பல சுவாரசியமான விஷயங்களை வெளிப்படையாகப் பேசி இருந்தார்.

நேற்று மேத்யூ ஹைடன் பேசி இருந்த விஷயத்தில் இந்திய அணியின் ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இரு அணிகளுக்குமே சமமாக இருப்பதாக கூறியிருந்தார். அதே சமயத்தில் புஜாரா இருந்திருந்தால் இந்திய அணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறி இருப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

ரிஷப் பண்ட்டின் ஆதிக்கம்

அதே சமயத்தில் 2018-19 2021 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட பொழுது ரிஷப் பண்ட் மிகச் சிறப்பான முறையில் விளையாடியிருந்தார். முதல் சுற்று பயணத்தில் சிட்னி டெஸ்டில் அதிரடியாக சதம் அடித்திருந்தார்.

அதே சமயத்தில் அடுத்த சுற்றுப் பயணத்தில் முதலில் விக்கெட் கீப்பராக வாய்ப்பு கிடைக்காமல் பிறகு விர்திமான் சஹா காயம் அடைய சிட்னி டெஸ்ட் டிரா ஆகவும் காபா டெஸ்ட் வெல்லவும் மிக முக்கியமான காரணமாக இருந்தார். இந்திய அணி இரண்டு முறை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றது ரிஷப் பண்ட் பங்கு மிகப் பெரியது.

- Advertisement -

ஆஸ்திரேலியா ரசிகர்கள் விரும்பும் இந்திய வீரர்

இந்த நிலையில் இதுகுறித்து பேசி இருக்கும் மேத்யூ ஹைடன் கூறும் பொழுது “ரிஷப் பண்ட் போன்றவர்களுக்கு மஸல் மெமரி மற்றும் வெற்றிக்கான தாகம் நிறைய இருக்கிறது. கடந்த முறை ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் அவர் ஒரு முக்கியமான வீரராக இருந்தார். மேலும் அவர் விளையாடிய விதத்திற்காக ஆஸ்திரேலிய மக்களும் அவரை விரும்பினார்கள்.

அது புதுமையான ஒன்றாகவும் உற்சாகமான ஒன்றாகவும் இருந்தது. பிறகு இந்திய அணியில் விராட் கோலி போன்ற சிறப்பான வீரர்களையும் நீங்கள் பெற்று இருக்கிறீர்கள். அவர் மீண்டும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த விரும்புவார். ஆஸ்திரேலியா கண்டிஷனில் மீண்டும் இந்திய அணி எப்படி விளையாட இருக்கிறது என்பதை பார்க்க நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்.

இதையும் படிங்க : 16/3 டு 448/6.. சவுத் ஷகில் முகமது ரிஸ்வான் மெகா பார்ட்னர்ஷிப்.. பாகிஸ்தான் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் முன்னிலை

மேலும் இந்திய அணி கடந்த முறை விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலே தொடரை வென்றது. கடைசியில் சரியான பந்துவீச்சாளர்களும் அவர்களுக்கு இல்லாமல் இருந்தார்கள். இது இந்திய அணிக்கு தற்பொழுது மிகவும் நம்பிக்கை அளிக்கும் விஷயமாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -