ஐபிஎல் தொடரில் பிசிசிஐ வைத்திருக்கும் விதிகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மிகவும் வெளிப்படையான கருத்தை தெரிவித்திருக்கிறார்.
கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடிய ராகுல் டிராவிட் எதிர்பாராத விதமாக காலில் காயமடைந்தார். தற்போது அந்த காயத்தால் நடக்க முடியாமல் இருக்கும் அவர் வீல்சேரில் அமர்ந்தபடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிசிசிஐ முக்கிய முடிவு
பொதுவாக கிரிக்கெட்டில் பனிப்பொழிவு என்பது மிகவும் மோசமான ஒன்றாக கருதப்படுகிறது. டி20 போட்டிகள் இரவில் நடக்கின்ற காரணத்தினால் இரண்டாம் பகுதியில் பனிப்பொழிவு வரும் பொழுது அந்த நேரத்தில் பந்து வீசுவது மிகவும் கடினமானதாக மாறுகிறது. இத்துடன் நீண்ட காலம் நடக்கும் டி20 தொடர்களை சுவாரசியத்துடன் வைப்பதற்கு போட்டித் தன்மை அதிகமாக இருக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது.
இதன் காரணத்தால் பிசிசிஐ ஐபிஎல் தொடரில் டாஸ் முடிவை பொறுத்து பிளேயிங் லெவனை முடிவு செய்து கொள்ளலாம் என விதியை மாற்றியது. ஏற்கனவே இரண்டு பிளேயிங் லெவனை டாஸ் வெல்வது தோற்பதற்கு தகுந்தவாறு செட் செய்து கொடுத்துவிட்டு அதில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் இம்பேக்ட் பிளேயர் விதியை கொண்டு வந்ததன் மூலம் போட்டி தன்மையை அதிகரித்து சுவாரசியத்தை ஏற்படுத்த முடியும் என பிசிசிஐ நம்பியது. தற்போது இந்த இரண்டு விதிகளும் சர்வதேச கிரிக்கெட்டில் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
எனக்கு இந்த விதியில் உடன்பாடு கிடையாது
இதுகுறித்து ராகுல் டிராவிட் பேசும்பொழுது “இந்த இம்பாக்ட் பிளேயர் விதி ஒரு வித்தியாசமான இயக்கத்தை கொண்டு இருக்கிறது. நேர்மையாக சொல்வது என்றால் நான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தபோது இந்த விதியில் எனக்கு உடன்பாடு கிடையாது. இந்த விதியால் போட்டித் தன்மை அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. ஆனால் ஒரு தேசிய அணியின் பயிற்சியாளராக எனது கண்ணோட்டத்தில் இது பெரிய சிக்கல்களை கொண்டு வரக்கூடியது”
இதையும் படிங்க : நான் ஆரஞ்சு தொப்பி ரேஸ்ல இருக்க ஒரே காரணம் இதுதான்.. என்னோட பிளானே வேற – சாய் சுதர்ஷன் பேட்டி
“இந்த விதியின் காரணமாக தேசிய அணிக்கு ஆல்ரவுண்டர்கள் கிடைப்பது கடினமாகிவிடும். தற்போது ஐபிஎல் அணிகள் தங்களுடைய காம்பினேஷனை அமைப்பதற்கு கூடுதலாக ஒரு வீரர் கிடைப்பதால் ஆல்ரவுண்டரை குறி வைப்பது கிடையாது. எனவே ஆல்ரவுண்டர்கள் உருவாவது இதனால் தடுக்கப்படலாம். மேலும் இந்த விதியால் எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடத்தில் கூட பேட்ஸ்மேன் வரும்படி இருக்கிறது. எனவே போட்டி எல்லா நேரத்திலும் கடைசிவரை செல்லும்” என்று கூறியிருக்கிறார்.






