இந்திய அணியில் தன்னைப் போன்ற ஒரு அனுபவ வீரருக்கு இன்னும் வாய்ப்புகள் அதிகம் கொடுத்திருக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் ரகானே வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
2023 ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெற்ற ரகானே அடுத்து உடனடியாக நீக்கப்பட்டார். அவருக்கு கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முழுவதுமாக இரண்டு வருடம் வாய்ப்புகள் கொடுக்கப்படும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அகர்க்கர் பிடிவாதம்
2024 ஆம் ஆண்டு இங்கிலாந்து இந்தியாவிற்கு டெஸ்ட் சுற்றுப்பயணம் வந்த பொழுது விராட் கோலி, கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா என நட்சத்திர மூத்த வீரர்கள் காயத்தால் விலகி இருந்தனர். அந்த சூழ்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் ரகானே மற்றும் புஜாரா இருவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த சமயத்தில் இந்தியத் தேர்வு குழு தலைவர் அகர்கர் தொடர்ந்து புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்தார். மேலும் அப்போதைய கேப்டன் ரோஹித் சர்மா அதற்கு முழுவதுமாக ஒத்துழைத்தார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்குமான கதவுகள் இந்திய கிரிக்கெட்டில் அடைக்கப்பட்டு விட்டது. ஆனாலும் தொடர்ந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் வாய்ப்புக்காக விளையாடினார்கள்.
இப்படி செய்திருக்கக் கூடாது
இதுகுறித்து ரகானே பேசும் பொழுது “இவ்வளவு நிறைய கிரிக்கெட் விளையாடிய பிறகு என்னைப் போன்ற ஒரு அனுபவ வீரர் நீக்கப்பட்ட நேரத்தில் நான் ஏதோ வித்தியாசமாக இருப்பதாக உணர்ந்தேன். என்னைப் போன்ற ஒரு அனுபவ வீரருக்கு மறு வாய்ப்பு கொடுக்கும் பொழுது கொஞ்சம் அதிகமாக கொடுக்க வேண்டும். ஆனால் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திடம் இருந்து எனக்கு எந்த தொடர்பும் இதுவரையில் இல்லை”
இதையும் படிங்க : இந்த முறை ஆஸி அணியை விட மாட்டோம்.. ஏன்னா இந்தியாவிலயே எங்களுக்கு அது கிடைக்குது – சூரியகுமார் யாதவ் பேச்சு
“அவர்கள் என்னை தேர்ந்தெடுத்தாலும் இல்லை என்றாலும் அது அவர்களுடைய விருப்பம். ஆனால் கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் நான் இந்திய அணியில் இருப்பது முக்கியம் என நினைத்தேன். அதற்கு நான் முழு அளவில் தயாராகியும் இருந்தேன்” என்று கூறியிருக்கிறார்.






