இந்த முறை ஆஸி அணியை விட மாட்டோம்.. ஏன்னா இந்தியாவிலயே எங்களுக்கு அது கிடைக்குது – சூரியகுமார் யாதவ் பேச்சு

0
260
Surya

இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கடந்த முறையை விட இந்த முறை ஆஸ்திரேலியாவில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்படும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

தற்போது இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அடுத்து துவங்க இருக்கிறது.

- Advertisement -

உலக சாம்பியன்

தற்போது இந்திய அணி டி20 வடிவத்தில் உலக சாம்பியன் ஆக இருந்து வருகிறது. அதேசமயத்தில் இந்த ஆண்டு முழுவதும் ஆஸ்திரேலியா அணி டி20 கிரிக்கெட் வடிவத்தில் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. எனவே இரு அணிகளும் மோத இருப்பதால் போட்டியில் சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது.

மேலும் ஆஸ்திரேலியாவில் கொஞ்சம் பவுன்ஸ் அதிகமாக இருப்பது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிரமத்தை உண்டாக்கலாம் என்பது பொதுவான விஷயமாக இருந்து வருகிறது. ஆனால் அது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்காது என சூரியகுமார் யாதவ் அதற்கான காரணத்தை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த முறை அசத்துவோம்

இதுகுறித்து சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது ” நாங்கள் கடந்த முறையை விட இந்த முறை ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன். எல்லா வடிவத்திலும் விளையாடுவதற்கு சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு நிறைய முறை சென்றோம். ஆனால் டி20 வடிவத்தில் விளையாட கடைசியாக 2020 ஆம் ஆண்டு சென்றிருக்கிறோம். மேலும் ஆஸ்திரேலியாவில் உள்ளது போல ஆடுகளங்களில் தான் நாங்கள் இந்தியாவிலும் விளையாடுகிறோம். எனவே எங்களுக்கு பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது. மேலும் நாங்கள் வித்தியாசமாக தயாராக வேண்டிய அவசியமும் இல்லை”

இதையும் படிங்க : ரோகித்துக்கு கம்பீர் விருது.. பணிவா நிலையா இருங்க.. இது ஆரம்பம்தான் என அறிவுரை – முழு விவரம்

“நான் இந்திய அணியின் கேப்டனாக இன்னொரு நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட செல்வேன் என எப்பொழுதும் நினைத்தது கிடையாது. இந்திய அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய ஆசையாக இருந்தது. தற்பொழுது எனக்கு ஒரு புதிய பொறுப்பு கிடைத்திருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியாவில் தற்போது விளையாட இருப்பது சவால் ஆகவும் மேலும் வேடிக்கையாகவும் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -