சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் ஜெய்ஸ்வாலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் களமிறங்கும் இந்திய அணி குறித்து தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடுகிறார்:
இதுகுறித்து பேசிய அஸ்வின் ” நான் முதலில் ஒரு விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். தனிப்பட்ட வீரர்களை இணைத்து தான் ஒரு அணியை நாம் கட்டமைக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட நபருக்காக நாம் அணியை தேர்வு செய்ய முடியாது. தனிப்பட்ட நபர்களுக்காக நாம் அணியை தேர்வு செய்ய முடியாது. அதேசமயம் ஒரு வீரரை சரியான முறையில் பயன்படுத்துவது என்பது ஒட்டுமொத்த அணியின் பொறுப்பாகும்.
ஒரு வீரர் நல்ல பார்மில் இருக்கிறார் என்றால் அவரை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். கடந்த 18 மாதங்களில் இந்திய அணி பொறுத்த வரை நல்ல பார்மில் இருக்கும் வீரர் என்றால் அது ஜெய்ஸ்வால் மட்டும் தான். ஆனால் அவர் டி20 உலக கோப்பையில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.”
கண்டிப்பாக நடக்காது என தெரியும்:
தொடர்ந்து பேசிய அவர் “ஆனால் நாம் இந்த விஷயத்தை டி20 உலக கோப்பை நடைபெறும் போது பேசவில்லை. ஜெய்ஸ்வால் கண்டிப்பாக அணியில் இருக்க வேண்டும்.அவர் விளையாடும் விதம் அபாரமாக இருக்கிறது. ஆனால் கண்டிப்பாக இது எனக்கு நடக்காது என்று தெரியும். இப்படி நடந்தால் நிச்சயம் நான் ஆச்சரியப்படுவேன். ஆனால் அது ஒன்னும் தவறான முடிவு அல்ல. இந்திய அணியின் நலனை கருதி பார்த்தால் ஜெய்ஸ்வால் விளையாடுவது அபாரமான முடிவாக இருக்கும். இதேபோன்று தற்போது இருக்கும் அணியில் நான்காவது வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை.
வெறும் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் தான் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது ஹர்திக் பாண்டியா உங்களுடைய மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இருப்பார். எனவே துபாயில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும். அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லை. ஜெய்ஸ்வாலும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.
இதையும் படிங்க: பிசிசிஐ போட்ட ரூல்ஸ் ஓகே.. ஆனா இந்த ஒரு விதியை என்னால் ஏத்துக்க முடியாது – இங்கி ஜாஸ் பட்லர் கருத்து
இருப்பினும் நீங்கள் அவரை பயன்படுத்தப் போவதில்லை. எனவே எனக்கு இந்திய அணி பார்க்கும்போது இந்த கேள்விகள் எல்லாம் எழுப்பத் தோன்றுகிறது. இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன் தேவை என்பதால் விக்கெட் கீப்பராக பண்டை அணி நிர்வாகம் தேர்வு செய்து இருக்கலாம். விஜய் ஹசாரே கோப்பையில் சஞ்சு சாம்சன் விளையாடாததால் அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பரிசீலனை செய்யப்பட்டிருக்க மாட்டார்” என்று அஸ்வின் கூறியுள்ளார்.