3 கோடியை வைத்து போட்டியை வென்ற பாண்டிங்.. சிஎஸ்கே கோட்டைவிட்ட வீரர் அபார பேட்டிங்.. பஞ்சாப் குஜராத்தை வீழ்த்தியது

0
16
Cooper

இன்று ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பான போட்டியில் வென்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆஸ்திரேலியா இளம் வீரர் கூப்பர் கானலி, குஜராத் டைட்டன்ஸ் அணியில் அசோக் சர்மா இருவரும் ஐபிஎல் தொடருக்கு அறிமுகம் ஆனார்கள்.

- Advertisement -

மந்தமான குஜராத் பேட்டிங்

முதலில் பேட்டிங் செய்ய வந்த குஜராத் அணிக்கு சாய் சுதர்சன் 11 பந்தில் 13 ரன், கேப்டன் கில் 27 பந்தில் 39 ரன், ஜோஸ் பட்லர் 33 பந்தில் 38 ரன், கிளன் பிலிப்ஸ் 17 பந்தில் 25 ரன், வாஷிங்டன் சுந்தர் 16 பந்தில் 18 ரன் என மந்தமான முறையில் பேட்டிங் செய்தார்கள். 20 ஓவர்களில் அந்த அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. வைசாக் விஜயகுமார் 3 விக்கெட் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ப்ரியன்ஸ் ஆர்யா 8 பந்தில் 7 ரன், ப்ரப்சிம்ரன் சிங் 24 பந்தில் 37 ரன், ஸ்ரேயாஸ் ஐயர் 11 பந்தில் 18 ரன், வதேரா 6 பந்தில் 3 ரன், ஷஷான்க் சிங் 5 பந்தில் 4 ரன், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 0, மார்க்கோ யான்சன் 10 பந்தில் 9 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழக்க போட்டியில் பரபரப்பு உருவானது.

- Advertisement -

கூப்பர் கானலி அபாரம்

இதைத் தொடர்ந்து ஒருமுனையில் சிறப்பாக விளையாடிய அறிமுக வீரர் கூப்பர் கானலி ஆட்டம் இழக்காமல் 44 பந்தில் 5 பவுண்டரி 5 சிக்ஸர்களுடன் 72 ரன்கள், வேகப்பந்துவீச்சாளர் பார்ட்லெட் கடைசியில் ஆட்டம் இழக்காமல் 5 பந்தில் 9 ரன் எடுக்க, பஞ்சாப் கிங்ஸ் அணி பரபரப்பான போட்டியில் 7 விக்கெட் இழப்புக்கு 19.1 ஓவரில் இலக்கை எட்டி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரசித் கிருஷ்ணா மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

இதையும் படிங்க : என் டீமுக்கு நான் சொன்ன விஷயம் இதுதான்.. ப்ராக்டிஸ் மேட்ச்ல பார்த்து இந்த முடிவை எடுத்து இருக்கேன் – ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சு

இந்தமுறை மினி ஏலத்தில் இடதுகை சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சூப்பர் கானலியை மூன்று கோடி ரூபாய்க்கு ரிக்கி பாண்டிங் வாங்கினார். ஆனால் சிஎஸ்கே நிர்வாகம் இடதுகை வீரர் தேவையாக இருந்தும் இவரை முயற்சி செய்யவில்லை. இவருக்கு பதிலாக 1.5 கோடி ரூபாய்க்கு வலது கை சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் மேத்யூ ஷார்ட்டை வாங்கியது. வீரர்களின் திறமையை கணித்து ஏலத்தில் வாங்குவதில் சிஎஸ்கே தொடர்ந்து பின் தங்குகிறது.

- Advertisement -