இன்று ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த தொடரை எப்படி அணுகுவோம்? என்பது குறித்து கூறியிருக்கிறார்.
கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்த போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்தது. ஆனால் ஒட்டுமொத்தமாக நல்ல அணியாக தற்போது இருக்கிறது.
இந்த முடிவை இதனால் எடுத்தேன்
இது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும் பொழுது “நாங்கள் இந்த போட்டியில் முதலில் பந்து வீச இருக்கிறோம். டார்கெட் என்ன என்று தெரிந்து விளையாடுவது எளிதாக இருக்கும். நாங்கள் சில பிராக்டீஸ் போட்டிகள் விளையாடினோம். அதில் முதலில் என்ன ஸ்கோர் அடித்தாலும் இரண்டாவது பேட்டிங் செய்யக்கூடிய அணி வென்று விடுகிறது. அதன் அடிப்படையில்தான் இந்த முடிவை எடுத்தேன்”
“எங்களுக்கு கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சிறப்பாக இருந்தது. ஆனால் அது முடிந்து போன ஒன்று. எதுவாக இருந்தாலும் கடந்த காலத்தில் நடந்ததை அப்படியே விட்டு விடுங்கள் என்பது தான் அனைத்து நான் சொல்லி இருக்கும் செய்தி. இப்போது நாங்கள் முதல் பந்தில் இருந்து மீண்டும் தொடங்க வேண்டும்”
நேரம்தான் முக்கியம்
“மைதானத்திற்கு சென்று நாம் நம்முடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும். மேலும் தற்போதைய தருணத்தில் இருக்க வேண்டும். டி20 கிரிக்கெட் என்பதால் வீரர்கள் மிகவும் முன்னோக்கி சிந்திப்பார்கள். அப்படி செய்யக்கூடாது”
இதையும் படிங்க : சூரியவன்சிக்கு தோனியை விட அது அதிகம் கிடைக்கும்.. அந்த குழந்தையை விட்டு விடுங்கள் – அஸ்வின் வேண்டுகோள்
“இது எங்களுக்கு சொந்த மைதானமாக இருந்தாலும் புள்ளி விவரம் சரியில்லை. ஆனால் கடந்த கால முடிவுகளை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இப்போது எங்கள் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். நாங்கள் சிறப்பாக தொடங்குவோம்” என்று கூறி இருக்கிறார்.






