6வது முறை.. சேப்பாக்கத்தில் நடந்த வரலாற்று சோகம்.. சிஎஸ்கே தோல்விக்கு என்ன காரணம்? – பஞ்சாப் கிங்ஸ் வெற்றி

0
5
Ruturaj

இன்று ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். சிஎஸ்கே அணியில் மேத்யூ ஷார்ட் இடத்திற்கு பிரசாந்த் வீர் கொண்டுவரப்பட்டார்.

- Advertisement -

ஆயுஷ் மத்ரே அதிரடி

சிஎஸ்கே அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சஞ்சு சாம்சன் 7 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து மீண்டும் ஏமாற்றம் தந்தார். கேப்டன் ருதுராஜ் 22 பந்தில் மெதுவாக விளையாடி 28 ரன்கள் மட்டுமே எடுத்து அவரும் ஏமாற்றம் கொடுத்தார்.

இதற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வந்த இளம் வீரர் ஆயுஷ் மத்ரே அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 73 ரன்கள் குவித்தார். சர்பராஸ் கான் அதிரடியாக ஆறு பவுண்டரிகள் ஒரு சிக்சர் உடன் 12 பந்தில் 32 ரன்கள், சிவம் துபே ஆட்டம் இழக்காமல் 27 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்கள். சிஎஸ்கே 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

பஞ்சாப் அதிரடி

இதைத் தொடர்ந்து வந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பிரியன்ஸ் ஆர்யா 11 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 39 ரன்கள், பிரப்சிம்ரன் சிங் 34 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 43 ரன்கள் எடுத்தார்கள். மூன்றாவது இடத்தில் வந்த கூப்பர் கனொலி 22 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 29 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 50 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணி 18.3 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : சேப்பாக்கத்தில் ஆயுஷ் மாத்ரே புது வரலாறு.. சுரேஷ் ரெய்னா சாதனை உடைந்தது.. சிஎஸ்கேவை தனி ஆளாக சுமந்து அசத்தல்

சிஎஸ்கே தொடர்ந்து சேப்பாக்கம் மைதானத்தில் 6 போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறது. மேலும் ஒரு ருதுராஜ் தலைமையில் 6 போட்டிகளில் தொடர் தோல்வி அடைந்திருக்கிறது. மேலும் ஒரு ருதுராஜ் 22 பந்துகளை சந்தித்து 28 ரன்கள் மட்டுமே எடுத்து மெதுவாக விளையாடியது இன்றைய போட்டியில் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -