இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்காக 18 வயதான ஆயுஸ் மத்ரே புதிய சாதனை படைத்திருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியில் மேத்யூ ஷார்ட் இடத்திற்கு இளம் வீரர் பிரசாந்த் பீருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
ஏமாற்றம் தந்த தொடக்க ஜோடி
இந்த போட்டியிலும் சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் ஏழு பந்துகளில் ஏழு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து கேப்டன் ருதுராஜ் பொறுமையாக விளையாடி 22 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் உடன் 28 ரன்கள் எடுத்தார்.
இதைத் தொடர்ந்து ஒரு முனையில் அதிரடியாக விளையாடிய ஆயுஸ் மத்ரே 43 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவருக்கு அடுத்து அதிரடியாக விளையாடிய சர்பராஸ் கான் 12 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 32 ரன்கள் எடுத்தார்.
ஆயுஸ் மத்ரே சாதனை
இதைத் தொடர்ந்து இன்னொரு முனையில் கடைசி வரை நிலைத்து நின்ற சிவம் துபே ஆட்டம் இழக்காமல் 28 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது.
இதையும் படிங்க : சிஎஸ்கே ரசிகர்களின் கோரிக்கை ஏற்பு.. ருதுராஜ் உடனடியாக செய்த காரியம்.. பஞ்சாப்புக்கு எதிராக கடும் சவால்
அந்த போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் குறைந்த வயதில் சிஎஸ்கே அணிக்காக அரை சதம் அடித்தவராக ஆயுஷ் மத்ரே சாதனை படைத்தார். சுரேஷ் ரெய்னா 21 வயதில் இதை செய்திருந்தார். இந்த சாதனையை உடைத்து ஆயுஸ் மத்ரே 18 பந்தில் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.






