இன்று ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மேலும் சிஎஸ்கே ஒரு முக்கியமான மாற்றத்தை செய்திருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை தோற்கடித்துள்ளது.
ஸ்ரேயாஸ் உறுதி
இந்த போட்டியில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவன் அப்படியே களம் இறங்குகிறது. மேலும் தனது அணி வீரர்களின் நம்பிக்கை சிறப்பாக இருப்பதால் வெற்றி பெறுவதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது என பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியிருக்கிறார்.
அதே சமயத்தில் சிஎஸ்கே அணி தரப்பில் ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ சார்ட் நீக்கப்பட்டிருக்கிறார். அவருடைய இடத்தில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட பிரசாந்த் வீர் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அந்த பிரச்சனை இருக்காது
கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் என எல்லோரும் பிரசாந்த் வீர் முதல் போட்டியில் கட்டாயம் இடம் பெற்று இருக்க வேண்டும் என தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்தார்கள். இதற்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்துள்ளது.
இதையும் படிங்க : SRH கேப்டனா அபிஷேக்தான் வரணும்.. தோனியால எனக்கு நடந்தது இப்ப அவனுக்கும் நடக்குது – யுவராஜ் வருத்தம்
இதுகுறித்து ருதுராஜ் பேசும் பொழுது “இந்த ஆடுகளம் வறண்டதாக காணப்படுகிறது. பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என்று நினைக்கிறேன். மேலும் இது ஏப்ரல் மாதம் என்பதால் பனிப்பொழிவு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே நாம் நல்ல ஸ்கோர் குவித்து எதிரணியை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






