ஐபிஎல் 2025

14 ஓவரில் 160 ரன்.. ஆட்டத்தையே கெடுத்த பாண்டிங்கின் மோசமான முடிவு.. இந்த வேலை உங்களுக்கு தேவையா.? விளாசும் ரசிகர்கள்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் லீக் தொடரின் 44வது போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

- Advertisement -

இதில் அதிரடியாக சென்று கொண்டிருந்த பஞ்சாப் அணியை பாண்டிங் செய்த தவறால் பஞ்சாப் அணியின் ரன் வேகம் குறைந்தது.

பஞ்சாப் அணி பேட்டிங்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி ஆடுகளத்தை நன்றாக அறிந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படியே பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன்சிங் மற்றும் பிரியான்ஸ் ஆர்யா ஆகியோர் களம் இறங்கினார்கள். பஞ்சாப் அணியில் அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 72 பந்துகளில் 120 ரன்கள் குவித்தது.

35 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் என 69 ரன்கள் குவித்த பிரியான்ஸ் ஆர்யா ரசல் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அவருக்குப் பிறகு அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பிரபு சிம்ரன்சிங் உடன் ஜோடி சேர, இந்த ஜோடியும் அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. இதில் எதிர்பாராத விதமாக பிரப் சிமரன்சிங் 49 பந்துகளை எதிர் கொண்டு 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 83 ரன்கள் குவித்து வெளியேறினார்.

- Advertisement -

பாண்டிங் செய்த தவறு

அப்போது பஞ்சாப் அணி 14.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் குவித்து நல்ல நிலையில் இருந்தது. இந்த சூழ்நிலையில் மிடில் வரிசையில் களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நெகல் வதேரா களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக பார்ம் அவுட் ஆன மேக்ஸ்வெல் களம் இறங்கினார். 8 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 7 ரன் எடுத்த நிலையில் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் போல்ட் ஆகினார்.

இதையும் படிங்க:இனி இந்தியா வேண்டாம்.. விராட் கோலி லண்டனில் குடியேற இதுதான் உண்மையான காரணம்.. வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்

அவருக்குப் பிறகாவது அதிரடி வீரர் களம் இறங்குவார் என்ற எதிர்பார்த்த நிலையில் பந்துவீச்சு ஆல் ரவுண்டரான மேர்கோ ஜான்சன் களம் இறங்கியது பலருக்கும் புரியாத வண்ணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவரும் 7 பந்துகளை வீணடித்து வெறும் 3 ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதிக்கட்டத்தில் நான்கு ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு வெறும் 32 ரன்கள் மட்டுமே வந்தது. அந்தத் தருணமே பஞ்சாப் அணியின் ரன் வேகம் முற்றிலுமாக சரிந்தது. பஞ்சாப் அணியின் கோச் ரிக்கி பாண்டிங்கின் இந்த முடிவு ரசிகர்களிடையே கேள்வியை எழுப்பி இருக்கிறது. கிட்டத்தட்ட 230 ரன்கள் வந்திருக்க வேண்டிய நிலையில் பஞ்சாப் அணி இறுதியில் நான்கு விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by