புதிய கேப்டனாக மயாங்க் அகர்வாலை அறிவிப்பதில் தயக்கம் – புதிய திட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்

0
665
Preity Zinta and Mayank Agarwal

இந்திய ரசிகர்கள் மத்தியில் தற்போதைய ஐபிஎல் தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இந்திய ரசிகர்கள் என்று மட்டுமல்லாது உலகம் முழுக்க உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் இந்த தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதுவும் இந்த ஆண்டு முதல் ஐபிஎல் தொடர்களில் சில மாற்றங்களை பிசிசிஐ கொண்டுவர உள்ளது. அதன் முக்கிய பகுதியாக 8 அணிகள் பங்கேற்காமல் இந்த முறை 10 அணிகள் பங்கேற்க உள்ளன. 2 புதிய அணிகள் ஆக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளன.

ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள ஐபிஎல் நிர்வாகம் அனுமதி கொடுத்தது. புதிதாக இணைந்த இரண்டு அணிகள் மட்டும் ஏலத்திற்கு முன்னதாகவே 3 வீரர்களை ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தியிருந்தது ஐபிஎல் நிர்வாகம். இதனடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் அணி மயங்க் அகர்வால் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரை மட்டும் தக்க வைத்தது.

- Advertisement -

இந்த இருவரையும் தக்க வைக்க அந்த அணிக்கு 18 கோடி மட்டுமே செலவாகியுள்ளது. இதனால் 72 கோடி ரூபாயுடன் ஏலத்தில் பஞ்சாப் அணி பங்கேற்க உள்ளது. எப்போதுமே அதிக தொகையுடன் களமிறங்கும் பஞ்சாப் அணி பல முன்னணி வீரர்களை வாங்குவது வழக்கம். அதே போல இந்த முறையும் பஞ்சாப் அதிக தொகையுடன் களம் காண்கிறது. கடந்த தொடர் வரை அந்த அணியின் கேப்டனாக இருந்த ராகுல் தற்போது லக்னோ அணிக்கு விளையாட சென்று விட்டார். இதன் காரணமாக புதிய கேப்டனை கண்டுபிடிக்கும் பணியில் அந்த அணி தீவிரம் காட்டி வருகிறது.

ஏலத்தில் கேப்டன் பொறுப்புக்கு தகுதியான வீரரை நிச்சயம் அந்த அணி வாங்கும் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். வார்னர், மார்கன் போன்ற முன்னணி வீரர்களை இந்த அணி நிச்சயம் வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஏலம் முடிந்தவுடன் நான் கேப்டன் யார் என்று அறிவிக்கப் போகிறோம் என்று பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் கூறியுள்ளது.

மேலும் அப்படி ஒரு வேளை கேப்டன் பதவிக்கு தகுதியான நபர் கிடைக்கவில்லை என்றால் மயங்க் அகர்வாலை கேப்டன் ஆக்கும் எண்ணமும் அந்த அணியில் இருப்பதாக கூறப்படுகிறது. புதிய கேப்டன் தலைமையில் இந்த அணி எப்படி செயல்படப் போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -