கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடி நட்சத்திர வீரராக உருவெடுத்திருக்கும் ஷஷான்க் சிங் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தன்னை வேறொரு விதத்தில் பயன்படுத்திக் கொள்ள இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
2024 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடரில் இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி வேறு ஒரு வீரர் என நினைத்து வாங்கிவிட்டது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக வாய்ப்பை பெற்ற இவர் மிகச்சிறப்பான முறையில் அதை பயன்படுத்தி விளையாட்டு அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பாக பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை தக்க வைத்துக்கொண்டது.
தற்பொழுது ஷஷான்க் சிங் பேட்டிங் பயிற்சி செய்வது மட்டும் இல்லாமல் பந்து வீச்சிலும் தனியாக கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டிருக்கிறார். தன்னால் அணிக்கு வந்து வீட்டிலும் பங்களிப்பு கொடுக்க முடியும் எனவும், தனக்கு பந்துவீச்சில் வாய்ப்பு கொடுப்பதாக ரிக்கி பாண்டிங் கூறியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து ஷஷான்க் சிங் பேசும்பொழுது “நான் தற்போது பந்துவீச்சில் நிறைய உழைத்து வருகிறேன். ஏனென்றால் நான் பேசக்கூடிய இரண்டு ஓவர்கள் அணியின் இயக்கவியலை பெரிய அளவில் மாற்றும். எனது வரம்பு என்னவென்று எனது பலம் என்னவென்று எனக்கு நன்றாக தெரியும். நான் கம்மின்ஸ் அல்லது ஸ்டார்க் கிடையாது. ஆனால் நான் 18 பந்துகளை சரியான இடத்தில் வீசினால் என்னால் போட்டியில் பந்துவீச்சில் வெற்றி பெற முடியும்”
“நான் இது குறித்து எனது பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இடம் பேசினேன். அவர் எனது பந்துவீச்சை பார்த்து இருக்கிறார். அவர் என்னை ஒரு கட்டத்தில் பந்துவீச்சாளராக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார். கடந்த 10 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்து வரும் அவருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. மேலும் பேட்டிங்கில் கடந்த ஆண்டு நான் செய்த சில தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார். சில போட்டி சுழலைகளை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்த நுண்ணறிவுகளை அவர் எனக்கு வழங்கி இருக்கிறார்”
இதையும் படிங்க : 300 ரன் அடிக்க போறது உறுதி.. இந்த ரெண்டு விஷயத்தை செஞ்சா பிளே ஆப் வந்துடுவோம் – சுப்மன் கில் நம்பிக்கை
“இத்தனை வருடங்களில் ஸ்ரேயாஸ் ஐயர் கொஞ்சம் கூட மாறவில்லை. இந்திய அணிக்காக மூன்று வடிவங்களிலும் அவர் சாதித்த பிறகும் கூட, உலகெங்கும் விளையாடி அவர் ரன்கள் எடுத்த பிறகும் கூட, அவர் ஆரம்பத்தில் பார்த்தபடி அப்படியேதான் இருக்கிறார். அவரைப் போல ஒருவர் கேப்டனாக இருப்பது நல்ல விஷயம். அவர் ஐபிஎல் தொடரை வென்ற கேப்டனாகவும் இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.