ஸ்ரேயாஸ் ஐயரை அந்த டீம் வாங்க கூடாதுனு கவனமா இருந்தேன்.. இவருக்கு பேரம் பேசுறது வேஸ்ட் – ரிக்கி பாண்டிங்

0
513

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2025 மெகா ஏளத்தில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி 26.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

இந்த சூழ்நிலையில் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஸ்ரேயாஸ் ஐயர் வாங்கப்பட்ட விதம் குறித்து சில முக்கியமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் மெகா ஏலம் 2025

கடந்த முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு ஐபிஎல் கோப்பையை வென்றிருந்த ஸ்ரேயாஸ் ஐயரை கேகேஆர் தக்க வைக்காமல் விடுவித்தது. இதனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக அளவு எதிர்பார்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே துபாயில் நடைபெற்ற மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஸ்ரேயாஸ் ஐயருக்கு கடும் போட்டி போட்டன.

இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயாசை 26.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இந்த சூழ்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரிக்கி பாண்டிங் வெளிநாட்டு வீரர்கள் அதிகம் இருந்தாலும் இந்திய வீரர்களை அணிக்குள் கொண்டு வருவதே தனது முதல் நோக்கமாக இருந்ததாக சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். மேலும் டெல்லி அணி அவரை வாங்க விடாமல் பார்த்துக் கொள்ள ஆர்வமாக இருந்ததாக சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயருக்கு திட்டம் போட்டேன்

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “இது ஒரு இந்தியன் பிரீமியர் லீக், வெளிநாட்டு வீரர்கள் குறித்தது அல்ல. வெளிநாட்டு வீரர்கள் எப்போதும் பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் நிறைய பணம் அல்லது வேறு ஏதாவது எதிர்பார்க்கிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை சரியான இந்திய வீரர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று அதற்கான வேலையை துவங்கினேன். எனவே ஸ்ரேயாஸ் ஐயருடன் முதலில் ஆரம்பிப்போம் என அவரை வாங்க நானும் அணி உரிமையாளரும் முடிவு செய்தோம்.

இதையும் படிங்க:இந்தியா ODI தொடர்.. 2 இங்கிலாந்து முன்னணி வீரர்கள் திடீர் விலகல்.. சாம்பியன் டிராபியில் சிக்கலா?.. வெளியான தகவல்

நான் ஏலம் எடுத்த போது ஒரு அணி அவரை விடாமல் ஆர்வம் காட்டியது. இருப்பினும் நான் அவரை அங்கு செல்லாமல் பார்த்துக் கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தேன். இதில் அர்ஷ்தீப் முதலிடத்தில் இருந்தார். கடந்த ஆண்டு இருந்த வீரர்களில் ஒருவர். அவரை 18 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு ஸ்ரேயாஸ் ஐயரை இரண்டாவது இடத்தில் சேர்த்தோம். மேலும் சுழற் பந்துவீச்சாளர் சகால் பேரம் பேச முடியாத இடத்தில் இருந்தார். எனவே அவருக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைக்க முடிவு செய்தோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -