இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர்கள் இருவர் சில போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்கின்ற செய்தி வெளியாகியிருக்கிறது.
இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவுக்கு வந்திருக்கின்ற நிலையில் அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த மாதம் 19ஆம் தேதி பாகிஸ்தானின் துவங்க இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பயிற்சி பெறுவதற்கு இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் 20 அணிகளுக்கும் முக்கியமாக அமைகிறது.
இரண்டு வீரர்கள் குறித்த அறிக்கை
இங்கிலாந்து ஒருநாள் அணியில் இடம் பெறாத லெக் ஸ்பின்னர் ரேகான் அகமத் சாம்பியன்ஸ் டிராபி அணியிலும் இடம் பெறவில்லை. இதைத் தொடர்ந்து அவர் இங்கிலாந்துக்கு திரும்ப திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் அவரை இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியுடன் இணைந்து இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இன்னொரு பக்கத்தில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் சாகிப் மக்மூத் இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கட்டாயம் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. இது தவிர மேலும் இரண்டு இங்கிலாந்து வீரர்கள் காயத்தால் சில போட்டிகளை தவற விடுகிறார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சில போட்டிகளில் விளையாடாத இங்கிலாந்து வீரர்கள்
தற்போது இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பராக ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கும் அறிவிக்கப்பட்டிருக்கும் இளம் வீரர் ஜேமி ஸ்மித் காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டார். மூன்றாவது போட்டியில் அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பார் என்று கூறப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க : இந்திய ஒருநாள் அணியில் சக்கரவர்த்தியை வைத்து கம்பீர் மாஸ் பிளான்.. அதிரடி மாற்றம்.. நடந்தது என்ன?
மேலும் இத்துடன் அதிவேக பந்துவீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் மூன்று ஒருநாள் போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டியில் விளையாட மாட்டார் என்றும் கூறப்பட்டிருக்கிறது. முதலில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஒன்றுக்கு நான்கு என இங்கிலாந்து தோற்றிருக்கும் நிலையில் இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் இந்த இரண்டு வீரர்களும் சாம்பியன்ஸ் டிராபியில் இடம் பெறுவதில் எந்தவித சிக்கலும் இருக்காது என்று கூறப்பட்டு இருக்கிறது.