நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மிகச்சிறப்பான முறையில் கம்பேக் கொடுத்த கருண் நாயர் எவ்வாறு விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றார் என்பது குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி கூறியிருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வாய்ப்பு பெற்று விளையாடிய கருண் நாயர் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக 40 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். இருந்தபோதிலும் டெல்லி அணி கடைசி நேரத்தில் செய்த தவறுகளால் தோல்வி அடைந்தது. ஆனாலும் அவரது பேட்டிங் குறித்து அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி பாராட்டி இருக்கிறார்.
மூன்று ஆண்டுகளுக்கு பிறகான வாய்ப்பு
ஐபிஎல் தொடரில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு முதல் முறையாக விளையாடும் வாய்ப்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கிடைத்தது. அதை பயன்படுத்திக் கொண்ட அவர் ஐபிஎல் தொடரில் ஏழு வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய அரை சதத்தை அடித்தார். மேலும் 22 பந்தில் அடித்த இந்த அரை சதம்தான் அவருடைய ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதமாக அமைந்தது.
மேலும் ஒரே ஆண்டில் தற்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒன்பது சதங்கள் அடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். மேலும் இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதற்கான சூழல்கள் காணப்படுவதாக மூத்த கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் கூறி வருகிறார்கள்.
கருண் நாயர் தொல்லை செய்தார்
இதுகுறித்து ஹேமங் பதானி பேசும் பொழுது “கருண் நாயர் கடந்த மூன்று வருடங்களாக ஐபிஎல் தொடர் விளையாடவில்லை. இந்த ஆண்டு மட்டும் அவர் ஒன்பது முதல் தர சதங்கள் அடித்திருக்கிறார். அவர் தன்னுடைய வாய்ப்புக்காக துடித்துக் கொண்டிருந்தார். எனக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும்? வலைப்பயிற்சியில் இன்னும் கொஞ்சம் கூடுதல் நேரம் கிடைக்குமா? என்று என்னை தொல்லை செய்து கொண்டே இருந்தார். அவர் விளையாடுவதற்கு மிகவும் ஆர்வமாக இருந்தார் இது சிறப்பானது”
இதையும் படிங்க : என் 50 வயதில்.. எங்க டீம் தேவையே இல்லாம எனக்கு அழுத்தம் தராங்க.. இதை எப்படி பார்ப்பது – ரிக்கி பாண்டிங் சுவாரஸ்யம்
“கருண் நாயர் நீங்கள் மைதானத்தில் சென்று வெளியேறிய விதம், உங்களுடைய பாசிட்டிவிட்டி, இன்டெண்ட், கேம் அவார்னஸ், எந்த பந்துவீச்சாளரை அடிப்பது? எங்கு அடிப்பது? போன்றவற்றை மிகச் சிறப்பாக புரிந்து கொண்டீர்கள். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் வாய்ப்பு பெற்று நீங்கள் விளையாடிய மிகவும் அற்புதமாக இருந்தது” என்று பாராட்டி இருக்கிறார்.