ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. 17 வருட சிஎஸ்கே சாதனையை முறியடித்த பஞ்சாப் அணி.. கொல்கத்தாவை வீழ்த்தி தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்

0
237

தற்போது நடைபெற்று முடிந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பஞ்சாபில் உள்ள முல்லன்பூரில் நடைபெற்றது.

இதில் மிகவும் சிறப்பாக விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி கொல்கத்தா அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

கொல்கத்தா பஞ்சாப் மோதல்

இந்த போட்டியை பொறுத்தவரை டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி இன்னிங்ஸை ப்ரியன்ஸ் ஆர்யா மற்றும் பிரபு சிம்ரன்சிங் ஆகியோர் களமிறங்கினார்கள். இந்த இருவரும் முதல் விக்கெட்டுக்கு 3.2 ஓவர்களில் 39 ரன்கள் குவித்தார்கள். அதற்குப் பின்னர் இந்த கூட்டணியை ஹர்ஷித் ராணா உடைத்தார். 22 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்தபோது இவரது பந்து வீச்சில் வெளியேறிய பிரியான்ஸ் ஆர்யா, பிரப் சிம்ரன் சிங் 15 பந்துகளில் 30 ரன்கள் குவித்து இவரது பவுலிங்கில் வெளியேறினார்.

அதற்குப் பிறகு பஞ்சாப் அணியின் விக்கெட்டுகள் வரிசையாக விழ ஆரம்பித்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட் ஆகி வெளியேற ஜாஸ் இங்கிலீஷ் 2 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் சசாங்க் சிங் அதிகபட்சமாக 18 ரன்கள் எடுக்க பஞ்சாப் அணி இறுதியில் 15.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் பந்துவீச்சில் கலக்கிய ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

சாதனை வெற்றி பெற்ற பஞ்சாப்

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களம் இறங்கியது. இந்த போட்டியில் கொல்கத்தா எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்தது. சுனில் நரேன் 2 ரன் மற்றும் டிகாக் 5 ரன்னில் விரைவாக ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். அதற்குப் பிறகு கேப்டன் ரகானே மற்றும் அன்கிஷ் ரகுவன்சி ஆகியோர் ஓரளவு பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்கள். அதற்குப் பிறகு இந்த கூட்டணியை சுழற் பந்துவீச்சாளர் சஹால் உடைத்தார்.

இதையும் படிங்க:விராட் கோலியிடம் நான் திருட நினைக்கும் விஷயம் அதுதான்.. அது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று – நியூசி கேன் வில்லியம்சன் பேட்டி

ரகுவன்சி 37 ரன், ரகானே 17 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேற, அதற்குப் பின்னர் கொல்கத்தா அணி வரிசையாக விக்கெட்டுகள் விடுவதற்கு ஆரம்பித்தது. இறுதியில் ரசல் 17 ரன்கள் வரை போராட இறுதியில் அவரை மேர்கோ ஜான்சன் வீழ்த்தினார். இதனால் கொல்கத்தா அணி முடிவில் 15.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பதிவீச்சில் கலக்கிய சஹால் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் குறைந்த ரன்கள் இலக்கை எதிரணிக்கு நிர்ணயித்து வெற்றி பெற்ற எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்து முதல் இடத்திற்கு முன்னேறினார். 2009ம் ஆண்டு இதே பஞ்சாப் அணிக்கு எதிராக 116 ரன்கள் இலக்கை நிர்ணயித்து வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஸ்ரேயாஸ் அதைவிட குறைந்த ரன்கள் இலக்கை எதிரணிக்கு நிர்ணயித்து வெற்றி பெற்றிருக்கிறார்.

- Advertisement -