நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் விராட் கோலியிடம் திருட நினைக்கும் விஷயம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இந்திய அணியின் நட்சத்திரம்
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி தற்போது ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 18 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடும் ஆர்சிபி இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அந்த பிரச்சனையை போக்கும் விதமாக ஆர்சிபி இந்த மெகா ஏலத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளுக்கும் சிறப்பான வீரர்களை வாங்கி அணியை வலுப்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் அணி நான்கு போட்டிகளில் வெற்றி மற்றும் இரண்டு போட்டிகளில் தோல்வி என்று தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நிலையில் இன்னும் நான்கு போட்டியிலே வெற்றி பெற்றால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். மேலும் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக இந்த முறை பெங்களூர் அணி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.
திருட நினைக்கும் விஷயம்
தென்னாபிரிக்காவில் தற்போது நடைபெற்ற முடிந்த எஸ்ஏ டி 20 கிரிக்கெட் லீக் தொடரில் வில்லியம்சன் விளையாடவில்லை. தற்போது மும்பையில் நடைபெற்று வரும் அகாடமியில் கலந்து கொண்டு பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் கேன் வில்லியம்சன் அங்கு இருந்த வீரர்கள் சிலர் கேட்ட கேள்விகளுக்கு சுவாரசியமான பதில்களை அளித்திருக்கிறார். மேலும் இந்த முறை பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:தோனி துல்லியமா அடிக்கல.. ஏதோ போறபோக்குல செஞ்ச ரன் அவுட்தான் அது.. பெருசா கொண்டாடாதீங்க – ராபின் உத்தப்பா
இது குறித்து வில்லியம்சன் கூறும்போது “வேறு கிரிக்கெட் வீரர்களின் என்னை கவர்ந்த ஷாட் குறித்துக் கேட்கிறீர்கள். எனக்கு விராட் கோலியின் கால்களை பயன்படுத்தி விளையாடும் பிலிக் ஷாட் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அவரிடமிருந்து நான் திருட நினைக்கும் ஷாட் அதுதான். இந்த சீசனிலும் விராட் கோலி கடந்த சீசன்களில் செய்ததைப் போலவே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார். அதில் எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை. மேலும் இந்த வருடம் ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி வெல்ல விராட் கோலி பெரிய உந்துதலாக இருக்கப் போகிறார் என்று தெரியும். எனவே நிச்சயம் இந்த முறை ஆர்சிபி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் இருக்கிறது” என்று கூறுகிறார்.