கடந்த ஐபிஎல் ஏலத்தில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் 26.75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார்.
இந்த சூழ்நிலையில் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை குறித்து சில விஷயங்களை ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.
கேப்டனை ஆதரிக்கும் பஞ்சாப் கோச்
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சாம்பியன் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. ஆனால் அந்த அணியின் கேப்டனாக திகழ்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா அணியில் தக்க வைக்கப்படாமல் கழட்டி விடப்பட்டார். அவரது திறமையை அறிந்த பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், அதிக விலை கொடுத்து அவரை தங்கள் அணிக்கு வாங்கினார்.
மேலும் அதற்கு பின்னர் கடந்த சில வாரங்களிலேயே பஞ்சாப் அணியின் அதிகாரப்பூர்வ கேப்டனாகவும் ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டார். கடந்த இங்கிலாந்து ஒருநாள் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் டிராபி தொடரில் வாய்ப்பு பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர், அதிலும் மிடில் வரிசையில் களமிறங்கி அற்புதமாக விளையாடி இந்திய அணி கோப்பையை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பஞ்சாப் அணியுடன் இணைந்த கேப்டன் தனது அணியோடு இணைந்து தீவிரமான முறையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
பெரிய அளவில் ஆதரவு தருகிறார்
இந்த சூழ்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் பாண்டிங் குறித்து கூறும் போது “ரிக்கி பாண்டிங்கை பொருத்தவரை அவர் அனைவரையும் ஆதரிக்கக் கூடிய ஒரு வீரர். கடந்த காலத்தில் நான் அவரோடு முதல்முறையாக பணிபுரிந்த போது எனக்கு நன்றாக ஆதரவளித்தார். மேலும் என்னை ஒரு சிறந்த வீரராக அவர் உணர வைத்தார். மேலும் இந்த டி20 வடிவத்தில் என்னால் சிறந்த அளவில் செயல்பட முடியும் என்றும் நம்ப வைத்தார். ஒரு பயிற்சியாளராக வீரருக்கு அவர் கொடுக்கும் நம்பிக்கை வேற லெவல்” ஆகும்.
இதையும் படிங்க:WTC 2025 – 2027.. ஐசிசி அமல்படுத்த உள்ள புதிய விதி.. இங்கி தொடரில் இந்திய அணிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. முழு விபரம்
ஐயர் குறித்து பாண்டிங் பேசும்போது
” ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சிறந்த மனிதர், கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த ஒரு சிறந்த கேப்டன். அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பஞ்சாப் முகாமில் இணைந்துள்ளார். எனவே அவர் அணியில் ஒரு கேப்டனாகவும், தலைவராகவும் தனது அடையாளத்தை உருவாக்க தொடங்குகிறார். அது நாங்கள் எங்களது முதல் ஆட்டத்தில் இறங்குவதற்கான சிறந்த தயாரிப்பாகும்” என்று பேசி இருக்கிறார்.