2023 – 2025க்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில் இதில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
இந்த சூழ்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த டெஸ்ட் சுழற்சியை சுவாரசியமாக்கும் விதமாக புதிய விதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
2025 – 2027 WTC சுழற்சி
இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை பொறுத்தவரை ஆதிக்கம் செலுத்தும் அணியாக இந்திய அணி இருக்கிறது. முதலாவது டெஸ்ட் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் விராட் கோலி தலைமையில் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியது. அதற்குப் பிறகு நடைபெற்ற தொடரில் ரோகித் சர்மா தலைமையில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி ஆஸ்திரேலிய அணி இடம் இரண்டாவது முறையாக தோல்வியைத் தழுவி டெஸ்ட் தொடரை இழந்தது.
இருப்பினும் இறுதி போட்டி வரை வந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை மட்டுமே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் தோல்வியால் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. இந்த சூழ்நிலையில் 2025 – 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்கான சுழற்சியில் ஐசிசி சிறிய அணிகளை உற்சாகப்படுத்தும் விதமாக புதிய விதி ஒன்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் இறங்கியுள்ளது. அதாவது தற்போது நடைமுறையில் இருக்கும் விதிகளின்படி மிகக்குறைந்த வித்தியாசத்தில் அல்லது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றி பெற்றால் அந்த அணிக்கு 12 புள்ளிகள் வழங்கப்படும்.
ஐசிசி அமல்படுத்தும் போனஸ் புள்ளி
மேலும் ஆட்டம் டையில் முடிந்தால் 6 புள்ளிகளும், டிரா அடைந்தால் 4 புள்ளிகளும் வழங்கப்படும். இந்த நிலையில் தற்போது டெலிகிராப்பில் வெளியான அறிக்கையின் படி, ஒரு அணி இன்னிங்ஸ் வெற்றி அல்லது 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் அணிகளுக்கு கூடுதலாக போனஸ் புள்ளிகளை வழங்குவது குறித்து வருகிற ஏப்ரல் மாதத்தில் ஐசிசி முடிவு செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற முன்னணி அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றால் அந்த அணிகளின் தரவரிசையின் படி கூடுதல் புள்ளிகள் வழங்கப்படும்.
இதையும் படிங்க:பிசிசிஐ அறிவித்த பரிசு மழை.. 58 கோடிகளை அள்ளும் இந்திய அணி.. CT ஃபைனல்.. யார் யாருக்கு எவ்வளவு.? முழு விபரம்
எனவே இது ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும் இது போட்டிகளை முடிவுகளை நோக்கிச் செல்ல உந்துதலாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே வருகிற ஜூன் மாதம் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளதால் இந்திய அணி பெரும் வெற்றிகளுக்கு அதன் தரவரிசையின் அடிப்படையில் போனஸ் புள்ளிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.






