இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியிடம் பஞ்சாப் கிங்ஸ் அணி பெரும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து முதல் ஐபிஎல் தொடர் வெற்றியை இழந்திருக்கிறது. இந்த தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆர்சிபி அணிக்கு விராட் கோலி பொறுமையாக விளையாடி 35 பந்தில் 43 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்களின் சிறு சிறு ஒத்துழைப்பால் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது.
பஞ்சாப் கிங்ஸ் தோல்வி
இதற்கு அடுத்து வெற்றி பெற முடிந்த இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கடைசியில் வந்த ஷஷான்க் சிங் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி அதிரடியாக 30 பந்தில் 61 ரன்கள் எடுத்தார். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதைத்தொடர்ந்து ஆர்சிபி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. இரண்டாவது முறையாக தொடர்ந்து ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வெல்ல கிடைத்த அரிய வாய்ப்பு ஸ்ரேயாஸ் ஐயருக்கு நழுவிப் போய்விட்டது. இந்த தொடர்பு முழுக்க சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களைக் கொண்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இறுதியில் ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.
வருத்தமாகவே இருக்கிறது
இந்த தோல்வி குறித்து பேசி இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த தோல்வி வருத்தமாக இருக்கிறது. ஆனால் எங்கள் வீரர்கள் எப்படி வாய்ப்பை எதற்கு கொண்டார்கள் என்பது சிறப்பாக இருக்கிறது. மேலும் எங்கள் அணியில் ஆதரவு ஊழியர்கள் வரை சிறப்பாக இருந்தார்கள். எங்கள் அணி சார்பாக பங்கேற்ற அணி உரிமையாளர்கள் வரை சிறப்பானவர்கள்”
“கடந்த போட்டியை வைத்து பார்க்கும் பொழுது இங்கு 200 ரன்கள் கூட சரியானதுதான். அவர்கள் அற்புதமாக பந்த வீசினார்கள். க்ருனால் பாண்டியா குறிப்பாக சிறப்பாக இருந்தார். அவருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது அதை பயன்படுத்தினார். அவர்தான் ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை உண்டாக்கி விட்டார்”
இதையும் படிங்க : எங்களால ஜெயிக்க முடியும்னு அன்னைக்குதான் முடிவு பண்ணினேன்.. கோப்பைக்கு காரணம் இதுதான் – ரஜத் பட்டிதார் பேச்சு
“எங்கள் இளம் வீரர்கள் ஒவ்வொருவர் குறித்தும் நான் பெருமைப்படுகிறேன். அவர்கள் அனைவரும் அச்சமற்ற முறையில் விளையாடினார்கள். நாங்கள் அடுத்த ஆண்டு திரும்பி வந்து சிறப்பாக விளையாடி இந்த கோப்பையை வெல்வோம். எங்களால் மீண்டும் நல்ல கிரிக்கெட்டை விளையாட முடியும்” என்று கூறி இருக்கிறார்.






