245 அடிச்சும் தோல்வி.. எனக்கே இந்த விஷயத்தை நினைச்சா சிரிப்பா இருக்கு – கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விரக்தி

0
275

நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அதிரடியாக விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 8 விகட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்து மீண்டும் தனது வெற்றிப் பாதைக்கு திரும்பியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தோல்வியடைந்த விதம் குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சில முக்கியமான விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆடுகளம் நன்றாக பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயர், பிரியான்ஸ் ஆர்யா, ஸ்டாய்னிஸ் ஆகியோரின் அதிரடியின் மூலமாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்தது. இதில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய சன் ரைசர்ஸ் அணி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை விளையாடியது. இதில் டிராவிஸ் ஹெட் 37 பந்துகளில் 66 ரன்கள் குவித்து வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா சூறாவளி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 55 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 14 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸ் என 141 ரன்கள் குவித்து வெளியேறினார். இதனால் 18.3 ஓவர்களில் சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆரம்பத்தில் அபிஷேக் சர்மாவிற்கு சில கேட்ச் வாய்ப்புகளை பஞ்சாப் கிங்ஸ் அணியினர் தவறவிட்டனர்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தோல்வி குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறும் போது ” இது ஒரு அற்புதமான போட்டி என்று எனக்கு தோன்றுகிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சன்ரைசர்ஸ் 2 ஓவர்கள் மீதும் வைத்து வெற்றி பெற்றது எனக்கு சிரிப்பை வர வைக்கிறது. தொடக்கத்தில் அவரது கேட்ச் வாய்ப்புகளை நாங்கள் தவற விட்டோம். அபிஷேக்சர்மா இன்றைய போட்டியில் ஒரு அதிர்ஷ்டசாலி. நாங்கள் எங்களது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பந்து வீசவில்லை.

இதையும் படிங்க:245 ரன்.. அபிஷேக் ஷர்மா சிங்கிளாக செய்த மெகா ரெக்கார்டு.. பஞ்சாப்பை நொறுக்கியது ஹைதராபாத் அணி

எனவே அது குறித்து விவாதித்து அடுத்தடுத்த போட்டிகளில் சரி செய்ய வேண்டும். அபிஷேக் ஷர்மா மற்றும் ஹெட் கூட்டணி அற்புதமாக இருந்தது. அவர்களை வெளியேற்ற எங்களுக்கு அதிக வாய்ப்புகள் அவர்கள் தரவில்லை. இந்த போட்டியில் எங்கள் அணியின் முக்கிய பந்து வீச்சாளர் பெர்குசன் காயம் காரணமாக வெளியேறினார். ஆனால் இது விளையாட்டின் ஒரு பகுதி, எனவே அதற்குத் தகுந்தவாறு நாம் செயல்பட வேண்டும். நான் மற்றும் வதேரா 230 ரன்கள் எடுத்தது நல்ல ஸ்கோர் என்று நினைத்தோம். ஆனால் பனியின் தாக்கம் இரண்டாவது பாதியில் கடினமாக இருந்தது என்று நினைக்கிறேன். சன்ரைசர்ஸ் தொடக்க வீரர்கள் பேட்டிங் செய்தது ஒரு உலகத்தரமான ஆட்டமாகும். அபிஷேக் சர்மா விளையாடிய விதம் நான் பார்த்த டி20 இன்னிங்ஸ்களில் மிகச் சிறந்த ஒன்றாகும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -