ஐபிஎல் 2024

கிரிக்கெட் பேஸ்பாலாக மாறிடுச்சு.. ஆனா இந்த வெற்றிக்கு நாங்க தகுதியானவங்க.. காரணம் இதான் – சாம் கரன் பேச்சு

நேற்று ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. அதிக ரன்களை துரத்தி சாதனை படைக்கப்பட்ட இந்த போட்டியின் வெற்றி குறித்து, பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 10.2 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சுனில் நரைன் 71 ரன்கள், பில் சால்ட் 75 ரன்கள் எடுத்தார்கள். ஒரு கட்டத்தில் ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ரன் குவித்த சாதனையைப் படைக்கும் வாய்ப்பில் இருந்த கொல்கத்தா, இறுதியாக 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்தது.

இதற்கடுத்து இந்த இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாபின் அணியும் சலைக்காமல் கொல்கத்தா அணிக்கு ஈடு கொடுத்து விளையாடி பவர் பிளேவில் 93 ரன்கள் குவித்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ஆனாலும் இன்னொரு துவக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ 108 ரன்கள், ஷஷாங்க் சிங் 68 ரன்கள் எடுக்க, பஞ்சாப் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு262 ரன்கள் எடுத்து, உலக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன் சேஸ் செய்த உலகச் சாதனையைப் படைத்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வென்றது.

- Advertisement -

இந்த போட்டியின் வெற்றிக்குப் பிறகு பேசிய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் ” மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எங்களுக்கு முக்கியமான ஒரு வெற்றி.தற்பொழுது கிரிக்கெட் பேஸ்பாலாக மாறி வருகிறது. இந்த போட்டியில் ரண்களை எல்லாம் விட்டு விடுங்கள். ஆனால் நாங்கள் இந்த வெற்றிக்கு மிகவும் தகுதியானவர்கள்.

இதையும் படிங்க : ப்ளீஸ் பவுலர்களை யாராவது காப்பாத்துங்க.. உலக சாதனை ரன் சேஸ் – அஸ்வின் வெளியிட்ட பதிவு

அணியின் வீரர்கள் பயிற்சி செய்யும் முறை, மற்றும் பயிற்சியாளர்கள் மேலும் கிடைக்கும் நம்பிக்கை, போட்டியில்இரண்டாவது பகுதியில் இருக்கும் பனிப்பொழிவு ஆகியவை, நமக்கு கூடுதலாக பந்துகள் கிடைப்பது போன்ற சாதகத்தை உருவாக்குகிறது. ஜானி அற்புதமான நாக் ஒன்றை விளையாடினார். ஷஷாங்க் சிங் இந்த ஐபிஎல் தொடரின் எங்களின் சிறந்த கண்டுபிடிப்பாக இருக்கிறார். அசுதோஸ் சர்மாவும் அப்படிப்பட்டவர்தான். இந்த வெற்றிக்கான பெருமை அனைவருக்கும் சேரும்” என்று கூறியிருக்கிறார்.

Published by