ஐபிஎல் 2024

இது டி20 உலக கோப்பைக்கு ஹெல்ப் பண்ண போகுது.. 12 மாசத்துக்கு முன்ன கொடுத்த பிளான்தான் – டிராவிஸ் ஹெட் பேட்டி

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று லக்னோ அணிக்கு எதிராக தங்களது சொந்த மைதானத்தில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்று இருக்கிறது. தனது அதிரடியான பேட்டி மூலம் டிராவிஸ் ஹெட் ஹைதராபாத் அணிக்கு சிறந்த வெற்றியை கொடுத்து, வெற்றி குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. நிக்கோலஸ் பூரன் 46 ரன்கள், ஆயுஸ் பதோனி 55 ரன்கள் எடுத்து அந்த அணியை காப்பாற்றினார்கள். ஹைதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

லக்னோ அணி விளையாடும் பொழுது ஆடுகளம் மெதுவாக இருப்பதாக கூறப்பட்டது. இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுப்பதற்கு சிரமமாக இருப்பதாக சொல்லப்பட்டது. இப்படியான நிலையில் இலக்கை நோக்கி ஹைதராபாத் களம் இறங்கியது.

ஹைதராபாத் அணியின் துவக்க ஜோடி ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் லக்னோ அணியின் பந்துவீச்சை நொறுக்கி தள்ளி விட்டார்கள். அபிஷேக் ஷர்மா 28 பந்தில் 75 ரன்கள் எடுக்க, முதலில் இருந்து தாக்கிய டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். 9.4 ஓவரில் 167 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

ஆட்டநாயகன் விருது பெற்ற டிராவிஸ் ஹெட் கூறும்பொழுது “இன்று 10பவர்களில் இலக்க எட்டி முடித்தது மிகவும் வேடிக்கையாக இருந்தது. அபிஷேக்கும் நானும் இதற்கு முன்பு இப்படியான பார்ட்னர்ஷிப்பை அமைத்திருக்கிறோம். நல்ல நிலையில் இருப்பதிலும், பந்தை கடினமாக பார்ப்பதிலும், பவர் பிளேவை பயன்படுத்திக் கொள்ளவும் நான் தொடர்ந்து உழைத்து வருகிறேன். இது டி20 கிரிக்கெட்டில் பெரிய உதவியாக இருக்கும். நவீன கிரிக்கெட்டில் 360 டிகிரிக்கு நீங்கள் எல்லா பக்கமும் செல்வது முக்கியம்.

இதையும் படிங்க : 9.4 ஓவர்.. 62 பந்துகள் மீதம்.. லக்னோ அணியை பந்தாடிய ஹைதராபாத் சாதனை.. அபிஷேக் ஹெட் ருத்ர தாண்டவம்

கடந்த 12 மாதங்களுக்கு முன்பு நான் இப்படித்தான் விளையாட வேண்டும் என்று ஆஸி அணியில் விருப்பப்பட்டார்கள். தற்பொழுது அதையே நான் எங்கும் செய்வதால் எனக்கு எந்த மாற்றமும் இல்லை. மேலும் அபிஷேக் ஷர்மா எவ்வளவு கடினமாக உழைக்கிறார், எவ்வளவு ஆழமாக சிந்திக்கிறார் என்று எனக்கு நன்றாக தெரியும். அவர் ஸ்பின்னை விளையாடுவது போல் விளையாடுவது கடினம்” என்று கூறி இருக்கிறார்.

Published by