ஐபிஎல் 2025

16வது சம்பவம்.. சிஎஸ்கேவிடம் மும்பையை தாண்டி கெத்து காட்டும் பஞ்சாப்.. ஆச்சரியப்பட வைக்கும் புள்ளி விபரங்கள்

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் அணி தனிப்பட்ட முறையில் சிஎஸ்கே அணியிடம் பல சாதனைகளை படித்திருக்கிறது.

- Advertisement -

தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றிகள் மற்றும் ஒரு டிரா என மொத்தம் 13 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அந்த அணிக்கு இன்னும் நான்கு போட்டிகள் எஞ்சி இருக்கின்ற காரணத்தினால் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது.

9ல் ஆரம்பித்து சமமான சோகம்

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சிஎஸ்கே அணி 16 முறையும் பஞ்சாப் அணி 9 முறையும் வெற்றி பெற்று இருந்தன. ஆனால் இங்கிருந்து இதற்கு அடுத்து நடந்த எட்டு போட்டிகளில் ஏழு போட்டிகளில் பஞ்சாப் அணி மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. தற்போது இருவரும் நேருக்கு நேராக மோதி கொண்ட போட்டிகளில் 16 – 16 என்று சமநிலையை எட்டி இருக்கிறது. சமீப காலத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக பஞ்சாப் அணியின் வெற்றி பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது.

மேலும் சிஎஸ்கே அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் அதிக வெற்றிகள் பெற்ற அணியாக ஒன்பது போட்டிகளில் ஐந்து வெற்றிகள் பெற்று மும்பை முதலிடத்தில் இருந்தது. தற்போது பஞ்சாப் அணியும் சிஎஸ்கே அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் ஒன்பது போட்டிகளில் ஐந்து போட்டிகளை வென்று முதல் இடத்திற்கு உயர்ந்திருக்கிறது.

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்பெஷல் சாதனை

ஐபிஎல் தொடர் வரலாற்றில் 190 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 முறை வெற்றிகரமாக துரத்தி முதல் இடத்தில் இருந்தது. இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிராக 190 ரன்களை துரத்திய பஞ்சாப் அணி இந்த சாதனையை முறியடித்திருக்கிறது. தற்பொழுது 190 க்கும் மேற்பட்ட ரன்களை வெற்றிகரமாக 11 முறை பஞ்சாப் துரத்தி இருக்கிறது.

இதையும் படிங்க : 2 சீசனுக்கு ஒரு முறை.. 17 ஆண்டு.. தோனிக்கும் சிஎஸ்கேவுக்கும் நடந்த 2 சோகம்.. உருவாகும் மோசமான வரலாறு

இத்தோடு ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக முறை நான்கு விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் சுனில் நரைன் 8, லசித் மலிங்கா 7 முறை என இருக்கிறார்கள். நேற்று ஒரே ஓவரில் சாகல் நான்கு விக்கெட் கைப்பற்றியதின் மூலமாக ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 4 விக்கெட் கைப்பற்றிய பவுலராக ஒன்பதாவது முறையாக சாதித்து முன்னேறி இருக்கிறார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் இரண்டு முறை நான்கு விக்கெட் கைப்பற்றிய பவுலர் என்கின்ற அரிய சாதனையையும் படைத்திருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: CSKPBKS

Recent Posts