நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று சிஎஸ்கே அணி தங்களது சொந்த மைதானத்தில் பஞ்சாப் அணியிடம் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலம் தனிப்பட்ட முறையில் தோனி மற்றும் சிஎஸ்கே அணிக்கு ஐபிஎல் வரலாற்றில் மோசமான சம்பவங்கள் நடந்திருக்கிறது.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் 220 ரன்கள் எடுக்கக்கூடிய இடத்தில் இருந்தது. ஆனால் சாகலுக்கு ஒரே ஓவரில் ஹாட்ரிக் உடன் நான்கு விக்கெட்டுகளை கொடுத்து சுருண்டது.
சிறப்பாக பேட்டிங் செய்த பஞ்சாப்
இதைத் தொடர்ந்து பஞ்சாப் அணிக்கு துவக்க விக்கெட்டுக்கு ஆரம்பத்தில் ஓரளவுக்கு நல்ல பார்ட்னர்ஷிப் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பிரப்சிமரன் சிங் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் அதிரடியாக அரை சதங்கள் அடிக்க, அந்த அணி இரண்டு பந்துகள் மீதம் வைத்து இலக்கை எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியிலும் சாம்கரன் மட்டுமே சிறப்பாக விளையாடி 88 ரன்கள் எடுத்தார். அவருக்கு டீவால்ட் பிரிவியஸ் ஓரளவுக்கு 32 ரன்கள் எடுத்து ஒத்துழைப்பு கொடுத்தார். ஆனால் சரியாக கடைசி நேரத்தில் பினிஷ் செய்திருக்க வேண்டிய சிவம் துபே மோசமான முறையில் விளையாடினார். தோனி கடைசி ஓவரை சந்தித்து விளையாடுவதற்கு முன்பாகவே ஆட்டம் இழந்தார். சிஎஸ்கே அணியின் பிரச்சனைகள் அப்படியே இருக்கிறது.
சிஎஸ்கே வரலாற்றில் முதல் முறை.
சிஎஸ்கே அணி அதிக முறை இறுதிப் போட்டிக்கு சென்ற அணியாக சாதனை படைத்திருக்கும் பெரிய அணியாகும். இரண்டு சீசனுக்கு ஒரு முறை சிஎஸ்கே அணி இறுதிப் போட்டிக்கு சென்று விடும். அந்த அளவிற்கு சீராக சிறப்பாக விளையாடி வந்த அணியாக சிஎஸ்கே இருக்கிறது. இந்த வகையில் தோனி இரண்டு சீசனுக்கு ஒரு முறை இறுதிப் போட்டியில் இருப்பார். ஆனால் இந்த முறை தான் தொடர்ந்து இரண்டு சீசன்களாக வேறு அணிகள் இறுதிப் போட்டியில் இருக்கப் போகின்றன. இது அவருக்கு தனிப்பட்ட முறையில் பெரிய சோகமான நிகழ்வாகும்.
இதையும் படிங்க : பத்திரானா பழைய மாதிரிதான் இருக்காரு.. ஆனா அவங்க உஷார் ஆனதுதான் இவர் தோல்விக்கு காரணம் – சிஎஸ்கே பவுலிங் கோச்
2012ஆம் சிஎஸ்கே அணி சொந்த மைதானத்தில் பத்து போட்டிகளில் நான்கு தோல்விகள் அடைந்திருந்தது. 2008ஆம் ஆண்டு சொந்த மைதானத்தில் ஏழு போட்டிகளில் நான்கு தோல்விகள் அடைந்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு வெறும் ஆறு போட்டிகளில் ஐந்து தோல்விகள் அடைந்து, ஒரு சீசனில் சொந்த மைதானத்தில் அதிக தோல்விகளை சந்தித்து தனிப்பட்ட முறையில் மோசமான சாதனை படைத்திருக்கிறது. இந்த வகையில் தோனி மற்றும் சிஎஸ்கே அணிக்கு தொடர்ந்து மோசமான சாதனைகள் வந்து கொண்டிருக்கிறது.






