ஆஸி டெஸ்ட் தொடரில் புஜாரா.. வித்தியாசமான முறையில் பங்கேற்பு.. வெளியான அதிகாரப்பூர்வ செய்தி

0
478
Pujara

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடக்க இருக்கும் பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய வீரர் புஜாரா வித்தியாசமான முறையில் பங்கேற்க இருக்கும் செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் வருகின்ற நவம்பர் 22ஆம் தேதி துவங்க இருக்கிறது. இதற்காக இந்திய அணி மூன்று விதமான தனிப்பட்ட பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக பயிற்சியை வீரர்களுக்கு காயமும் அடிக்கடி ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கில் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு

சில நாட்களுக்கு முன்பு இந்திய அணியின் சிமுலேஷன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கில் ஸ்லிப் பகுதியில் கேட்ச் பிடிக்கும் பொழுது கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.

இதனால் அவருடைய மூன்றாம் இடத்தில் ஏற்கனவே அங்கு விளையாடி வந்த புஜாராவை விளையாட வைக்க வாய்ப்புகள் இருப்பதாக பேசப்பட்டு வந்தது. மேலும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் புஜாரா ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் இடம்பெற வேண்டும் என்று தொடர்ந்து சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்துக் கொண்டு வருகிறார்கள்.

- Advertisement -

வித்தியாசமான முறையில் பங்கேற்பு

2018-19 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி தொடரை வென்று அசத்தியது. அந்தத் தொடரில் புஜாரா நான்கு டெஸ்ட் போட்டிகளில் 74.42 ஆவரேஜில் 521 ரன்கள் குவித்து இந்திய அணி தொடரை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். மேலும் அந்தத் தொடரில் தொடர் நாயகன் விருதும் வென்றார்.

இந்த நிலையில் தற்போது நடக்க இருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு புஜாரா வித்தியாசமான முறையில் ஹிந்தி கிரிக்கெட் வர்ணனையாளராக பங்கேற்க இருக்கிறார் என்கின்ற செய்தி அதிகாரப்பூர்வமாக வந்திருக்கிறது.

இதையும் படிங்க : பெரிய சிக்ஸ் அடிச்சு ஜெயிக்கிற தோனியை விட.. இந்த விஷயத்துலதான் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் – மைக்கேல் ஹசி கருத்து

புஜாரா இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அவரும் அதற்காக கடுமையாக முயற்சி செய்து வந்தார். சமீபத்தில் ரஞ்சி டிராபியில் இரட்டை சதம் அடித்திருந்தார். ஆனால் சோகமான முறையில் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறார்!

- Advertisement -